News March 14, 2025
சிமெண்ட் விலை உயர்வு?

சிமெண்ட் நிறுவனங்கள் வெட்டியெடுக்கும் சுண்ணாம்புக்கல் மீது 1 டன்னுக்கு ₹160 தமிழக அரசு கூடுதல் வரியாக விதித்துள்ளதால், சிமெண்ட் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கூடுதல் வரி விதிப்பானது வரும் 20ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. சுண்ணாம்புக்கல்லுக்கு ஏற்கெனவே ராயல்டி வசூலிப்பதுடன், கூடுதலாக வரியும் விதிப்பதால் தங்கள் செலவு அதிகரிக்கும் என சிமெண்ட் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
Similar News
News March 10, 2026
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்: சு.சுவாமி

தொடர்ந்து 3-வது முறையாக PM நாற்காலியில் அமர்ந்துள்ள மோடி, USA அதிபர் டிரம்பை பார்த்து ஏன் இவ்வளவு பயப்படுகிறார் என BJP மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், எனக்கு தெரிந்த தகவல்களை தற்போது வரை நான் வெளியிடவில்லை; அப்படி தான் வெளியிட்டால் PM மோடி தனது பதவியை ராஜினாமா செய்ய அவை வழிவகுக்கும் என எச்சரிக்கும் தொனியில் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
News March 10, 2026
போர் காலத்தில் இவற்றை செய்தால் தப்பிக்கலாம்

இஸ்ரேல், USA தொடங்கிய போரால் தற்போது மேற்காசிய நாடுகள் பற்றி எரிகின்றன. இந்நிலையில் இதுபோன்ற ஒரு சூழல் வந்தால் எப்படி அதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பது குறித்து நிபுணர்கள் சில டிப்ஸ் அளித்துள்ளனர். அவற்றை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். இது வெறும் தகவலுக்காக மட்டுமே. போர் வரப்போகிறதா என பதற்றமடைய வேண்டாம் மக்களே. SHARE.
News March 10, 2026
கச்சா எண்ணெய் விலை சரிந்தது.. இன்ப அதிர்ச்சி!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு $10(₹918) குறைந்துள்ளது. இதனால், 159 லிட்டர் கொண்ட ஒரு பேரல் விலை தற்போது $85- $90 என்ற அளவில் குறைந்துள்ளது. மேற்கு ஆசிய நாடுகளில் விரைவில் போர் முடிவுக்கு வரும் என டிரம்ப் பேசிய நிலையில், இந்த விலை சரிவு நிகழ்ந்துள்ளது. இதனால், இந்தியாவில் LPG தட்டுப்பாடு நீங்குவதோடு, பெட்ரோல், டீசல் விலை உயரும் என்ற அபாயம் சற்று தணிந்துள்ளது.


