News March 14, 2025
டெல்லி அணியின் கேப்டனான அக்ஷர் பட்டேல்

டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ஆல் ரவுண்டர் அக்ஷர் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட், தற்போது லக்னோ அணிக்காக விளையாட உள்ளார். டெல்லி அணியின் கேப்டன் பதவிக்கு கே.எல்.ராகுலுடன் போட்டி நிலவிய நிலையில், அக்ஷருக்கு பதவி கிடைத்துள்ளது. CT தொடரிலேயே ராகுலின் 5ஆவது இடத்தில் அக்ஷர் விளையாடியது குறிப்பிடத்தக்கது. இந்த முறையாவது டெல்லி கோப்பையை வெல்லுமா?
Similar News
News March 14, 2025
குட் பேட் அக்லி இன்னொரு பாட்ஷாவா? – கதை இதுதானாம்!

அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி பட்டையை கிளப்பிய நிலையில், படத்தின் கதை என்னவென்று இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. அதாவது, கொடூரமான டானாக இருந்த AK, வன்முறையை கைவிட்டு அமைதியான வாழ்க்கைக்கு திரும்புகிறாராம். ஆனால், கடந்த காலத்தில் செய்த செயல்கள் அவரை மீண்டும் துரத்துகிறதாம். அதனை ஏகே எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை என சொல்லப்படுகிறது. பாட்ஷா படம் மாதிரி இருக்குல்ல…
News March 14, 2025
ஸ்மார்ட் மீட்டர் எப்படி செயல்படும் தெரியுமா? (1/2)

தற்போது வீடுகளில் இருப்பவை டிஜிட்டல் எல்க்ட்ரிசிட்டி மீட்டர் ஆகும். இதை மாற்றிவிட்டு, தமிழகம் முழுவதும் 3.05 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்த தமிழக அரசு திட்டமிட்டு, டெண்டர் கோரியுள்ளது. மின்சார வாரியத்தில் நிலவும் ஆள் பற்றாக்குறையால், 2 மாதங்களுக்கு ஒருமுறை தற்போது மின் கணக்கீடு எடுக்கப்படுகிறது. ஆனால் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டால், தானாகவே மின் பயன்பாட்டை அந்த மீட்டர் கணக்கிடும்.
News March 14, 2025
ஸ்மார்ட் மீட்டர் எப்படி செயல்படும் தெரியுமா? (2/2)

மாத கடைசியில் மின்பயன்பாட்டை கணக்கிடும் ஸ்மார்ட் மீட்டர், அதை பில்லாக்கி, மின்சார வாரியத்தில் பயனாளர்கள் அளித்துள்ள செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கும். அதில் கட்ட வேண்டிய தொகையுடன், கட்டணத்தை செலுத்த வேண்டிய கடைசி தேதியும் இருக்கும். இதுபோல மாதா மாதம் ஸ்மார்ட் மீட்டர் பில்லை உருவாக்கி, எஸ்எம்எஸ்ஆக அனுப்பும். இதன்மூலம் மாதந்தோறும் கணக்கெடுப்பு முறை அமலாகும்.