News March 14, 2025

சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் கோட்டை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் விடுமுறை நாட்கள் மற்றும் சுப முகூர்த்த நாட்களை ஒட்டி வரும் 17ஆம் தேதி வரை 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பயணிகள் வசதிக்காக போக்குவரத்து கழகம் இணைய வழியாகவும் முன்பதிவு செய்து பயன் பெற போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது.

Similar News

News March 14, 2025

வெற்றி நாயகனான கூலித் தொழிலாளியின் மகன்

image

சேலம்: வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த மோ.அஜித். இவர் சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர்.தாயும் கூலித் தொழிலாளி. இத்தனை கடின சூழ்நிலைகளையும் கடந்து,அரசு பணி தேர்வுக்கு தன்னம்பிக்கையுடன் படித்து தற்போது வெற்றி பெற்றுள்ளார். இப்பொழுது இளநிலை வருவாய் ஆய்வாளராக குறிஞ்சிப்பாடி, கடலூரில் பணியமர்த்தப்பட்ட சான்றிதழை கடலூர் மாவட்ட ஆட்சியர் திரு.சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்களிடம் பெற்றார். இவரை வாழ்த்தலாமே…!? 

News March 14, 2025

சேலம் ; கல்லூரி பஸ் மோதியதில் சிறுவன் பலி 

image

சேலம் : வீரகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லதுரையின் மகன் கிருபாகரன்( 10) அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.  இன்று(மார்ச் 14) காலை கிருபாகரன் பள்ளிக்குச் சென்றபோது தனியார் கல்லூரி பேருந்து கிருபாகரன் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதனால் கி பலத்த காயம் அடைந்த கிருபாகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வீரகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

News March 14, 2025

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை ; 4 பேருக்குஆயுள் தண்டனை 

image

சேலம் : கடந்த 2017ம் ஆண்டு ஓமலூர் பகுதியைச் சேர்ந்த மன நலம் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியை டிபன் வாங்கித் தருவதாகச் சொல்லி அழைத்து முள்ளுக்காட்டில் வைத்து 4 பேர் பாலியல் வன்புணர்ச்சி செய்தனர். இதுகுறித்து, தாரமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்ட 4 பேருக்கு போக்சோ சட்டத்தின் கீழ்  இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

error: Content is protected !!