News March 14, 2025

தமிழக பட்ஜெட்டில் நெல்லையின் அறிவிப்பு

image

▶️ தாமிரப்பரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.400 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்.
▶️ போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 1 லட்சம் புத்தகங்கள், மாநாட்டு கூட வசதிகளுடன் நூலகங்கள்.
▶️நரசிங்கநல்லூரில் புதிய தொழிற்பேட்டை.
▶️ மீன் இறங்குதளம், மீன்பிடி வலைகள் பின்னுதல்.
▶️ரூ.225 கோடி மதிப்பீட்டில் 14.2 கிமீ மேற்கு புறவழிச்சாலை பணிகள் இந்தாண்டு தொடங்கும்.

Similar News

News August 25, 2025

நெல்லை பேருந்து நேரங்களுக்கு CLICK பண்ணுங்க!

image

நெல்லை பேருந்து நிலையத்தில் 6 நடைமேடைகள் அமைந்துள்ளன. இங்கிருந்து நாங்குநேரி, ஏர்வாடி, வள்ளியூர், திசையன்விளை,களக்குடி, ரெட்டியார்பட்டி, கீழப்பிள்ளையார்குளம் உட்பட நெல்லையில் உள்ள பல ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இயங்குகிறது. ஆனால் பேருந்து எந்த நேரத்தில வருதுன்னு உங்களுக்கு தெரியலையா? இங்கே <>க்ளிக் <<>>பண்ணி நம்ம ஊர்களுக்கு செல்லும் நேரத்தை தெரிஞ்சுக்கிட்டு உங்க பயணத்தை சுலபாமாக்குங்க….

News August 25, 2025

நெல்லையில் இன்று கல்வித்துறை அமைச்சர் முக்கிய ஆலோசனை

image

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் நாளை காலை 11:15 மணி அளவில் பாளை நேருஜி கலையரங்கில் மாநில அளவிலான அடைவு தேர்வு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கல்வித்துறை அலுவலர்கள்மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

News August 25, 2025

முன்னீர்பள்ளம் தீ விபத்தில் புதிய தகவல்

image

திருநெல்வேலி ஆரைகுளத்தில் மகனின் திருமணத்திற்கு அழைக்காத கோபத்தில் தந்தை, மனைவி மற்றும் மற்றொரு மகனின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூரம் நடந்துள்ளது. இதில் மனைவி மற்றும் மகன் உயிரிழந்த நிலையில் 50 % காயங்களுடன் தந்தை உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார். மூத்த மகனுக்கு திருமணமாகி 4 நாட்களே ஆன நிலையில் மனைவியுடன் அவர் கன்னியாகுமரிக்கு சென்றுள்ளார். குடும்பத் தகராறு இத்தகைய கொடூரத்தை அரங்கேற்றியது.

error: Content is protected !!