News March 14, 2025
8 மாவட்டங்களில் புதிய அரசுக் கலைக் கல்லூரிகள்

சென்னை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் புதிதாக அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். பழங்குடி மாணவர்களின் இடைநிற்றலைத் தடுக்க 14 உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. மேலும், அரசு யுனிவர்சிட்டிகளுக்கு ₹700 கோடியும், அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன்மிகு மையத்திற்கு ₹50 கோடியும் ஒதுக்கப்படும் என்றார்.
Similar News
News March 14, 2025
இந்த 2 நாள்கள் வங்கிகள் இயங்காது

ஒருங்கிணைந்த வங்கிகள் சங்கம் (UFBU) சார்பில், வரும் 24, 25ஆம் தேதிகளில் நாடு தழுவிய ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இரண்டு நாள்களும் வங்கிகள் செயல்படாது. இந்திய வங்கிகள் அசோசியேஷனுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், UFBU இந்த ஸ்டிரைக்கை அறிவித்துள்ளது. வாரத்திற்கு 5 நாள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளனர்.
News March 14, 2025
PNB வங்கியில் வேலைவாய்ப்பு… உடனே விண்ணப்பிங்க

PNB வங்கியில் 350 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. ஆபீசர்-கிரெடிட், ஆபீசர்-இன்டஸ்ட்ரீ, மேனேஜர்-ஐடி, சீனியர் மேனேஜர்-ஐடி, மேனேஜர் -டேட்டா சயின்டிஸ்ட், மேனேஜர்- சைபர் செக்யூரிட்டி, சீனியர் மேனேஜர்- சைபர் செக்யூரிட்டி ஆகியவை அந்த பணியிடங்கள். இதற்கான விண்ணப்பப்பதிவு <
News March 14, 2025
ஹோலியால் சிறுபான்மையினர் அச்சம்: மெஹ்பூபா

மதவெறியர்களால் ஹோலி பண்டிகை சிறுபான்மையினருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் பண்டிகையாக மாறியுள்ளதாக முன்னாள் J&K முதல்வர் மெஹ்பூபா முஃப்தி கவலை தெரிவித்துள்ளார். அதிகாரத்தில் இருப்பவர்களும் இதற்கு துணை போவதாகவும், இந்தியா விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது எனவும் அவர் கூறியுள்ளார். இந்து vs முஸ்லிம் என எதிரெதிராக நிறுத்துவது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.