News March 31, 2024
₹1000.. ஒருநாள் தள்ளிப்போகிறது

தேசிய திறனறி தகுதித் தேர்வில் வெல்லும் மாணவர்களுக்கு மாதம் ₹1000 வழங்கப்படுகிறது. 8ம் வகுப்பில் இந்தத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 9-12ஆம் வகுப்பு வரை மொத்தம் ₹48000 வழங்கப்படும். மாதந்தோறும் 7ஆம் தேதி மாணவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த நிலையில், ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை என்பதால் அடுத்த நாளான திங்கள் கிழமைதான் இந்த பணம் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News October 30, 2025
நாளை மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா நாளை(அக்.31) தொடங்குகிறது. தஞ்சை பெரியகோயில் வளாகத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் 2 நாள்கள் அரசு சார்பில் இவ்விழா நடைபெறவுள்ளது. ராஜராஜ சோழனின் சதய விழாவையொட்டி நாளை மறுதினம்(நவ.1) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்களுக்கு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News October 30, 2025
ஐசிசி பேட்டிங் தரவரிசை: No.1 இடத்தை பிடித்த இந்தியர்கள்

ஐசிசி ODI பேட்டிங் தரவரிசையில் 5 இந்திய வீரர்கள் மட்டுமே இதுவரை No.1 இடத்தை அலங்கரித்துள்ளனர். இப்பட்டியலில் லிட்டில் மாஸ்டரான சச்சின் டெண்டுல்கரை விட, இரண்டு வீரர்கள் அதிக புள்ளிகள் எடுத்து NO.1 இடத்தில் இருந்திருக்கின்றனர். யார் அவர்கள் என்பதை அறிய, புகைப்படங்களை SWIPE செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
News October 30, 2025
RRB-யில் 2,570 பணியிடங்கள்.. ₹35,400 சம்பளம்!

RRB-யில் காலியாக உள்ள 2,570 ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்பு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 18- 33 வயதுக்குட்பட்ட Diploma, B.E, B.Tech படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்ச்சி பெறுவோருக்கு மாதம் ₹35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். வரும் நவம்பர் 30-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் அப்ளை பண்ண <


