News March 14, 2025

அண்ணா புற்றுநோய் மையத்தை மேம்படுத்த ரூ.120 கோடி

image

காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் மையத்தை மேம்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 14 வயதுடைய அனைத்து பெண்களுக்கும் கருப்பை புற்றுநோய் தடுப்பூசி செலுத்த படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறியும் கருவிகள் ரூ.110 கோடி செலவில் வாங்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News March 15, 2025

இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (மார்ச் 15, 16) வெப்பம் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட்டை நெருங்கியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 15, 2025

மகனை காப்பாற்ற முயன்ற தந்தை உயிரிழப்பு

image

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவளூர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பு (45). இவர், ஹாலோ பிளாக் சிமெண்ட் கற்கள் செய்யும் தொழில் செய்து வந்தார். நேற்று (மார்.14) காலை வீட்டின் அருகே உள்ள ஹாலோ பிளாக் கற்கள் செய்யும் இயந்திரத்தை அன்புவின் மகன் நிஷாந்த் தொட்டுள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அவரை காப்பாற்ற அன்பு முயன்றபோது, அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தில் அவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.

News March 14, 2025

காஞ்சிபுரம்: ரூ.120 கோடியில் மருத்துவமனை தரம் உயர்த்தல்

image

தமிழகத்தின், 2025 – 26ம் ஆண்டுக்கான பட்ஜெட், சட்டசபையில் இன்று(மார்.14) தாக்கல் செய்யப்ட்டு வருகிறது. இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரூ.120 கோடியில் காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையை தரம் உயர்த்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!