News March 14, 2025
200% வரி விதிப்பு: டிரம்ப் அதிரடி

அமெரிக்க விஸ்கி மீது ஐரோப்பிய யூனியன் கூடுதல் வரி விதித்துள்ளதால், ஐரோப்பிய நாடுகளில் தயார் செய்யப்படும் ஒயின், ஷாம்பெயின் மற்றும் மதுபானங்களுக்கு 200% வரியை டிரம்ப் அறிவித்து அதிரடி காட்டியுள்ளார். அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் நாடுகள், அதிக வரி விதிக்கக் கூடாது என டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்த புதிய வரி விதிப்பு ஏப்.1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
Similar News
News March 14, 2025
மார்ச் 28-ல் தவெக பொதுக்குழு – அழைப்பு விடுத்த விஜய்!

2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கி களமாடி வருகிறார் தவெக தலைவர் விஜய். கட்சியில் இதுவரை 114 மா.செ.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர், உட்கட்டமைப்பு நிர்வாகிகள் நியமனத்திற்கான ஒப்புதலை பெற்று தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப விஜய் திட்டமிட்டுள்ளார். அதற்காக, மார்ச் 28-ல் தவெக பொதுக்குழு நடைபெறும் என அறிவித்த விஜய், நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
News March 14, 2025
குட் பேட் அக்லி இன்னொரு பாட்ஷாவா? – கதை இதுதானாம்!

அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி பட்டையை கிளப்பிய நிலையில், படத்தின் கதை என்னவென்று இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. அதாவது, கொடூரமான டானாக இருந்த AK, வன்முறையை கைவிட்டு அமைதியான வாழ்க்கைக்கு திரும்புகிறாராம். ஆனால், கடந்த காலத்தில் செய்த செயல்கள் அவரை மீண்டும் துரத்துகிறதாம். அதனை ஏகே எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை என சொல்லப்படுகிறது. பாட்ஷா படம் மாதிரி இருக்குல்ல…
News March 14, 2025
ஸ்மார்ட் மீட்டர் எப்படி செயல்படும் தெரியுமா? (1/2)

தற்போது வீடுகளில் இருப்பவை டிஜிட்டல் எல்க்ட்ரிசிட்டி மீட்டர் ஆகும். இதை மாற்றிவிட்டு, தமிழகம் முழுவதும் 3.05 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்த தமிழக அரசு திட்டமிட்டு, டெண்டர் கோரியுள்ளது. மின்சார வாரியத்தில் நிலவும் ஆள் பற்றாக்குறையால், 2 மாதங்களுக்கு ஒருமுறை தற்போது மின் கணக்கீடு எடுக்கப்படுகிறது. ஆனால் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டால், தானாகவே மின் பயன்பாட்டை அந்த மீட்டர் கணக்கிடும்.