News March 31, 2024
தென்காசியில் வைகோ பிரச்சார நிகழ்ச்சிகள் அறிவிப்பு

இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரச்சார நிகழ்ச்சி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மக்களவைத் தொகுதியில் அவர், 13 ஆம் தேதி மாலை 4 மணிக்கு திருவேங்கடம் பகுதியில் பேசுகிறார். 5 மணிக்கு சங்கரன் கோவில், 6 மணிக்கு புளியங்குடி, 7 மணிக்கு கடையநல்லூரில் உரையாற்றுகிறார்.
Similar News
News February 16, 2026
தென்காசி: மகளிருக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி

தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் சுய உதவி குழுக்களுக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு குழு தொடங்கி 6 மாதங்கள் ஆகியிருக்க வேண்டும். பிசி, எம்பிசி, சீர்மரபினர்கள் இந்த கடனை பெற முடியும். மேலும் இந்த கடனை பெற கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் அலுவலகம் கூட்டுறவு வங்கிகள், கடன் சங்கங்கள் <
News February 16, 2026
தென்காசி: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

தென்காசி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
1.அட்வான்ஸ் தொகையாக 2 மாத வாடகையை மட்டுமே கொடுக்க வேண்டும்.
2.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
3.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
4.மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். (SHARE)
News February 16, 2026
தென்காசி: கேட் கீப்பருக்கு பாலியல் தொல்லை; நீதிமன்றம் அதிரடி

தென்காசி, பாவூர்ச்சத்திரம் ரயில் நிலைய கேட் கீப்பராக பணியாற்றி வந்த பெண்ணிடம், 2023 ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த அனீஸ் என்ற இளைஞர், அவர் தனியாக அறையில் இருந்த போது, அவரை கீழே தள்ளி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இது குறித்த வழக்கில் அனீசுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டது. ஏற்கனவே இவர் மீது பாலியல் வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


