News March 14, 2025
பிரபல வீரருக்கு IPL-லில் விளையாட 2 ஆண்டுகள் தடை

ஐபிஎல் விதிகளை மீறியதற்காக இங்கிலாந்து வீரர் ஹாரி புருக்குக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. நடப்பாண்டு IPLல சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியால் ₹6.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட அவர், இறுதி நேரத்தில் தன்னால் அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்க முடியாது என தெரிவித்தார். இது விதிகளுக்கு புறம்பானது என்பதால் ஹாரி புருக் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.
Similar News
News March 6, 2026
UPDATE: தமிழக தேர்தல் தேதி.. சற்றுமுன் வெளியானது

தமிழக தேர்தல் தேதி மார்ச் 13-ல் அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. இந்நிலையில், 10 – 15-க்குள் தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஒரேகட்டமாக தேர்தலை நடத்தவும் ECI திட்டமிட்டுள்ளது. மேலும், மே முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
News March 6, 2026
அணு ஆயுத போர்.. எஸ்கேப் பிளான் வைத்திருக்கும் டிரம்ப்

அணு ஆயுத போர் வெடித்தால் அதிலிருந்து தப்ப டிரம்ப் ஒரு பிளானை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அணுகுண்டு தாக்குதலை தாங்கும் அளவிற்கு USA-ல் 3 சீக்ரெட் பங்கர்கள் இருக்கிறதாம். 2-ம் உலகப்போருக்கு பிறகு கட்டப்பட்டதாக சொல்லப்படும் இந்த பங்கர்களை டிரம்ப் தற்கால வசதிகளுடன் அப்டேட் செய்து வைத்திருக்கிறாராம். போர் நேரத்தில் பங்கரில் இருந்தபடியே உத்தரவு வழங்கும் வசதிகளும் இதில் இருப்பதாக கூறப்படுகிறது.
News March 6, 2026
வெள்ளி விலை இன்று கிலோவுக்கு ₹5,000 குறைந்தது

<<19309113>>தங்கத்தை<<>> போன்றே வெள்ளி விலையும் இன்று (மார்ச் 6) குறைந்துள்ளது. 1 கிராம் ₹5 குறைந்து ₹290-க்கும், 1 கிலோ ₹5,000 குறைந்து ₹2.9 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. இதனால் வெள்ளி நகைப் பிரியர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சர்வதேச சந்தையில் வெள்ளி விலை குறைவதால் வரும் நாள்களிலும் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


