News March 14, 2025
செங்கல்பட்டில் பாம்பு கடித்து ஆண்டுக்கு 33 பேர் பலி

அதிக விஷத் தன்மை கொண்ட பாம்புகள் கடித்தால் நரம்பு மண்டலம் பாதிப்பு, ரத்தம் உறைதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.இதற்காக பாம்பு கடிக்கு என தனியாக நச்சு நீக்கி சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது.அந்த வகையில், கடந்தாண்டு பாம்பு கடியால் பாதிக்கப்பட்டு, 536 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதில் 503 பேர் நலமுடன் வீடு திரும்பி உள்ளனர்;33 பேர் உயிரிழந்து உள்ளனர்.
Similar News
News September 29, 2025
மாவட்ட போக்குவரத்து காவல்துறை முக்கிய அறிவிப்பு

ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, செங்கல்பட்டு வழியாக தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பொதுமக்கள், படாளம்-புக்கத்துறை பகுதிகளில் மேம்பாலப் பணி நடப்பதால், அவ்வழியைத் தவிர்க்க வேண்டும். இது தொடர்பாகக் காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வாகன நெரிசலைத் தவிர்க்க, பயணிகள் மாற்று வழியில் பயணம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News September 29, 2025
செங்கல்பட்டு: கண் நோயை குணமாகும் சீனிவாச பெருமாள்

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள செம்மஞ்சேரி கிராமத்தில் அமைந்துள்ளது 1500 ஆண்டுகள் பழமையான செம்மஞ்சேரி சீனிவாச பெருமாள் கோயில். இங்குள்ள சீனிவாச பெருமாளை வணங்குவதன் மூலம் கண் தொடர்பான பிரச்சினைகள் குணமடைவதாக நம்பப்படுகிறது. ஒரு பல்லவ மன்னன் தனது இழந்த பார்வையை இங்கு வழிபட்டு மீண்டும் பெற்றதாகத் தல புராணம் கூறுகிறது. இன்றும் பலர் கண் சம்பந்தமான கோளாறுகளுக்கு இங்கு வந்து வழிபடுகிறார்கள். ஷேர் பண்ணுங்க
News September 29, 2025
ALERT: செங்கல்பட்டில் இன்று கனமழை வெளுக்கும்

செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய 2 மாவட்டங்களில் இன்று (செப்.29) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே வெளியே செல்லும் மக்கள் ரெயின் கோர்ட், குடையுடன் முன்னெச்சரிக்கையா இருங்க. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.