News March 14, 2025
மகளின் கழுத்தை அறுத்த தாய் மீது வழக்கு

நெய்யூரைச் சேர்ந்தவர் விஜிலின் சாம் (44). இவர் மனைவி மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர். இந்நிலையில் அவர் அவரது மகள் விஜோலின் தீபா கழுத்தை அறுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக இரணியல் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 13, 2025
குமரி: அனைத்து வரிகளும் இனி ஒரே லிங்க்கில்

கன்னியாகுமரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை <
News September 13, 2025
குமரி: வாகன விபத்து 13.60 லட்சம் காசோலை வழங்கல்

நாகர்கோவிலில் மக்கள் நீதிமன்றத் தொடக்க விழா மாவட்ட முதன்மை நீதிபதி கார்த்திகேயன் தலைமையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் நீதிபதிகளான சுந்தரய்யா, செல்வகுமார், கூடுதல் மாவட்ட நீதிபதிகள் செல்வன் ஜேசு ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வின் தொடக்கமாக மோட்டார் வாகன இழப்பீடு சம்பந்தமான இரண்டு வழக்குகளுக்கு 13 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கபட்டது.
News September 13, 2025
குமரியில் நாளை மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம்

நாளை (14ம் தேதி) தென் மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளான கன்னியாகுமரி நெல்லை மாவட்டங்களை ஒன்றி உள்ள கேரள பகுதி தென்காசி, விருதுநகர், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.