News March 13, 2025
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 29.3.25 சனிக்கிழமை தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ளது. எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. அனுமதி முற்றிலும் இலவசம். வேலை நாடும் மனுதாரர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் candidate login ல் விவரங்களை பதிவு செய்தல் வேண்டும் மேலும் விவரங்களுக்கு மனுதாரர்கள் 9345261136 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
Similar News
News November 12, 2025
கரூர் ரயில்வே நிலையத்தில் எஸ்.பி திடீர் ஆய்வு

கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வாகனச் சோதனை மற்றும் இரவு ரோந்து பணிகளை மாவட்ட எஸ்.பி ஜோஸ் தங்கையா நேரில் சென்று ரயில்வே நிலையத்தில் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதில் அவ்வழியாக வந்த சந்தேகிக்கப்படக்கூடிய வாகனங்கள் நிறுத்தப்பட்டு, ஓட்டுநர்களின் உரிமம் மற்றும் வாகன ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டு பொதுமக்களின் பாதுகாப்பையும், சட்ட ஒழுங்கையும் உறுதி செய்தார்.
News November 12, 2025
தமிழ் கனவு மூன்றாம் கட்ட நிகழ்ச்சி

கரூர் மாவட்டத்தில் தமிழ் கனவு நிகழ்வு மூன்றாம் கட்டமாக, தளவாபாளையம் M.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் நிகழ்ச்சியில் “அறிவின் வழியே மானுட விடுதலை” என்ற தலைப்பின் கீழ் வழக்கறிஞர் மதிவதனி, கல்லூரி மாணவ மாணவியர்களிடையே நாளை 13.11.2025 அன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ள நிலையில் சொற்பொழிவு ஆற்ற உள்ளார் என மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார்.
News November 12, 2025
கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கரூரில் பிரதம மந்திரியின் கௌரவ நிதி திட்டத்தின்கீழ், (PM-KISAN) தனித்துவ அடையாள அட்டை பெற்று பி.எம்.கிஷான் 21வது தவணை தொகை பெற முன்னோர்கள் பெயரில் பட்டா உள்ள விவசாயிகள் தங்களது பெயரில் பட்டா மாறுதல் பெற்று, அதனுடன் ஆதார் எண்ணை இணைத்து பதிவு செய்து தனித்துவ விவசாய அடையாள எண் பெற்றால் மட்டுமே பி.எம்.கிஷான் அடுத்த தவணை தொகை தொடர்ந்து கிடைக்கும். என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


