News March 13, 2025
எப்போதும் வென்றான் ஊர் பெயர் காரணம் தெரியுமா?

ஒரு சிலிர்க்க வைக்கும் ஊர் பெயர் தான் எப்போதும் வென்றான். சுமார் 700 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ராஜகம்பள சமூகத்தை சேர்ந்த சோலையப்பன் பாண்டிய மன்னர்களின் போர் வெற்றிக்கு உதவினார். அதனால் பாண்டிய மன்னர் அவரை எப்போதும் வென்றான் சோலையப்பன் என அழைத்தார். அதுவே எப்போதும் வென்றான் என ஊர் பெயராகியது. போர் ஒன்றில் சோலையப்பன் இறந்துவிடவே ராஜகம்பள சமூகத்தினர் அவருக்கு கோவில் கட்டி வழிபடுகின்றனர். ஷேர் it
Similar News
News March 5, 2026
தூத்துக்குடியில் 209 போலீசார் இடமாற்ற உத்தரவு ரத்து

தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் 209 உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் அனைவரும் சமீபத்தில் தான் வேறு மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு வந்தனர். இந்த நிலையில் இவர்கள் திடீரென மீண்டும் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அறிந்த தென் மண்டல ஐஜி இந்த பணியிட மாற்ற உத்தரவை ரத்து செய்து அதை இடத்தில் பணிபுரிய உத்தரவிட்டார்.
News March 5, 2026
தூத்துக்குடி பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடியில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சார்பில் பைபர் wi-fi இன்டர்நெட் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில் மாதம் ஒன்றுக்கு 50 mbps இணைய வேகத்தில் 3300 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதில் முதல் 12 மாதங்களுக்கு மாதத்திற்கு 50 ரூபாய் தள்ளுபடி விலையில் வழங்கப்பட்டுள்ளது என பிஎஸ்என்எல் வணிகப்பகுதி முதன்மை பொது மேலாளர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
News March 5, 2026
தூத்துக்குடி வரும் துணை முதல்வர்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி இன்று தூத்துக்குடிக்கு வருகை தர உள்ளார். அதன்படி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறும் அரசு விழா மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் ஆகியவைகளில் கலந்து கொள்ள உள்ளார். இந்நிகழ்வில் எம்பி கனிமொழி மற்றும் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.


