News March 13, 2025
ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய மார்க் வுட்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் நட்சத்திர பவுலரான மார்க் வுட், காயம் காரணமாக தொடரில் பங்கேற்க மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கால் மூட்டில் சர்ஜரி செய்யப்பட்டுள்ளதால், 4 மாதம் அவர் ஓய்வெடுக்க வேண்டியுள்ளது. இவரை ரூ.7.5 கோடி தொகைக்கு லக்னோ அணி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கு பதிலாக புதிய வீரரை தேடும் நிலைக்கு லக்னோ தள்ளப்பட்டுள்ளது.
Similar News
News April 8, 2026
CSK-வுக்கு திரும்பினார் நட்சத்திர வீரர்

நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடிய 3 போட்டிகளிலும் CSK தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 11-ம் தேதி டெல்லிக்கு எதிரான போட்டியில் விளையாடப் போவதை CSK வீரர் பிரேவிஸ் உறுதி செய்துள்ளார். இடுப்பு வலி காரணமாக CSK-வின் முதல் மூன்று போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை. தற்போது அவரது வருகை அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News April 8, 2026
மத்தியஸ்தம் செய்தது பாகிஸ்தான் இல்லையா?

போர் நிறுத்தத்துக்கு பாக்., மத்தியஸ்தம் செய்தது இந்திய அரசியலிலும் புயலை கிளப்பியுள்ளது. இந்த மத்தியஸ்தத்தில் சீனாவும் முக்கிய பங்காற்றியதாக கூறப்படுகிறது. போர் நிறுத்த அறிவிப்புக்கு சில மணிநேரங்கள் முன்புகூட சீன வெளியுறவு அதிகாரிகள் ஈரான் அரசுடன் பேசியதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன. முன்னதாக, ஹார்முஸ் நீரிணை தொடர்பான ஐநாவின் ஒரு தீர்மானத்தை ஒருதலைபட்சமானது என சீனா கூறியிருந்தது.
News April 8, 2026
திமுகவினருக்கு தோல்வி பயம்: சுந்தர்.சி

தோல்வி பயத்தால் திமுகவினர் உளறுவதாக சுந்தர்.சி விமர்சித்துள்ளார். மதுரை மத்திய தொகுதிக்கு நலத்திட்டங்களை கொண்டுவரவிடாமல் PTR-ஐ தடுத்தது யார் என கேள்வி எழுப்பிய அவர், ஆனால் மக்கள் சேவை செய்ய முடியாதவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் என்றார். PTR போன்று நாங்கள் மெத்தப்படித்தவர்கள் அல்ல, மக்கள் பிரச்னையை புரிந்து கொண்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>


