News March 13, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேலே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News March 10, 2026
கிருஷ்ணகிரி காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு முக்கியமான இணைய பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இணையதளங்களில் உள்நுழையும் போது ‘Keep me logged in’ அல்லது ‘Remember me’ போன்ற வசதிகளை குறிப்பாக பொது கணினிகளில் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு செய்தால் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்பு உள்ளது.
News March 10, 2026
கிருஷ்ணகிரி போலீஸ் விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி: மது மற்றும் புகைப்பழக்கத்திற்கு எதிராக மாவட்ட காவல்துறை சமூக வலைதளங்களில் தீவிர விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறது. “மது உடல்நலத்திற்கு கேடு, புகை உயிரைக் கொல்லும்” என எச்சரித்துள்ள போலீசார், ஆரோக்கியமான வாழ்வை முன்னெடுக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
News March 10, 2026
பர்கூர் துணி இதனால்தான் இவ்வளோ ஃபேமஸா?

கிருஷ்ணகிரி-சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பர்கூர். இங்கு 75 ஆண்டு காலமாக துணி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு மொத்தம் 2,000-க்கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகள் இயங்கி வருகின்றன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் துணி வாங்க வந்து செல்கின்றனர். மற்ற பகுதிகளை காட்டிலும் இங்கு விலை குறைவாகவும், தரமாகவும் உள்ளதே மக்கள் குவிய காரணம். இதனால் இது ‘குட்டி சூரத்’ என்றழைக்கப்படுகிறது.


