News March 13, 2025
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு: ED

TASMAC தலைமை அலுவலகம், மதுபான ஆலைகளில் மார்ச் 6ம் தேதி நடத்திய சோதனை தொடர்பாக ED விளக்கம் அளித்துள்ளது. அதில், சோதனையில் ரூ.1,000 கோடி கணக்கில் வராதது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபான கொள்முதல் மூலம் பல்வேறு தனியார் நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த ED, TASMAC உயரதிகாரிகளுக்கு நெருக்கமானவர்களுக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
Similar News
News July 11, 2025
₹189-க்கு புதிய பிளானை அறிமுகப்படுத்திய ஏர்டெல்!

ஏர்டெல்லில் இன்டர்நெட்டுடன் சேர்த்தே குறைந்தபட்சமாக ₹211-க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்ற நிலை இருக்கிறது. இதனால், இன்டர்நெட் பயன்படுத்தாத பெரியவர்கள் ரீசார்ஜ் செய்யாமலே விட்டுவிடுகின்றனர். இதனால், சிம் inactive ஆகி விடுகிறது. இதற்கு தீர்வாக, யூஸர்களுக்கு புதிய ₹189 திட்டத்தை ஏர்டெல் அறிவித்துள்ளது. 21 நாள்களுக்கு 1 GB டேட்டாவுடன், Unlimited calls & 300 SMS இந்த பிளானில் வழங்கப்படுகிறது.
News July 11, 2025
கோலிவுட்டில் ஜாதி இல்லையா? கலையரசன் பரபரப்பு Statement!

தமிழ் சினிமாவில் ஜாதி இல்லை என சொல்கிறார்கள். ஆனால் அது மிக மோசமாக இருக்கிறது. இயக்குநர் ரஞ்சித் உடன் இருப்பதால் எனக்கு பட வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என கலையரசன் கூறியுள்ளது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. அவருக்கு ஆதரவாக பலரும் பதிவிட்டு வருகின்றனர். பல முற்போக்கு கருத்துக்களை பேசி பாடம் எடுக்கும் கோலிவுட்டிலும் இப்படியா என நெட்டிசன்கள் கேள்வி கேட்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
News July 11, 2025
மாலை 5 மணிக்கு.. சபரிமலை பக்தர்களின் கவனத்திற்கு

தேவபிரசன்னத்தில் கூறப்பட்டதன் அடிப்படையில் சபரிமலையின் மாளிகப்புரத்தம்மன் கோயிலில் நவக்கிரக கோயில் கட்டப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அதன் பிரதிஷ்டைக்காக, இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. ஞாயிறு காலை 11 மணிக்கு நவக்கிரக பிரதிஷ்டை நடத்தப்பட்டு, இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆடி மாத பூஜைக்காக கோவில் நடை மீண்டும் 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை திறக்கப்படும்.