News March 13, 2025
சங்கரன்கோவில்: விபத்தில் வட்டாட்சியர் & மகள் படுகாயம்

சங்கரன்கோவில் அருகே உள்ள வன்னிக்கோனேந்தலில் பைக் மீது கார் மோதிய விபத்தில் பைக்கில் பயணித்த சிவகிரி வட்டாட்சியர் மைதீன் பட்டாணி, அவரது மகள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சங்கரன்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
Similar News
News September 12, 2025
செங்கோட்டை எக்ஸ்பிரஸ் இன்று இங்கு மட்டும் இயக்கம்

செங்கோட்டை- ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று திண்டுக்கல் – கரூர் இடையே மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஈரோடு – கரூர் இடையே பொறியியல் பணிகள் காரணமாக இந்த ரயில் பகுதி தூரம் ரத்து செய்யபட்டுள்ளது. மேலும், கொடைக்கானல் ரோட்டில் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக செங்கோட்டை- திண்டுக்கல் இடையே (செவ்வாய் தவிர) ஏற்கனவே ரத்து செய்யபட்டுள்ளது.
News September 12, 2025
தென்காசி: மூதாட்டியிடம் நகை திருட்டு

தென்காசி மாவட்டம், கடையத்தை சேர்ந்த 65 வயது மூதாட்டி மகாலட்சுமி வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த ஒருவர் தலைவலி தைலம் தடவிவிடுவதாகக் கூறி, மூதாட்டி அணிந்திருந்த நகைகளைக் கழற்றி கீழே வைக்கச் சொல்லியிருக்கிறார். நகைகளைக் கழற்றி வைத்ததும், அவற்றை எடுத்துக்கொண்டு அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து கடையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News September 12, 2025
தென்காசி: ரூ.99 ஆயிரம் சம்பளத்தில் RBI வேலை

இந்திய ரிசர்வ் வங்கி (RBI)-ல் 120 கிரேட் பி அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. பட்டப்படிப்பு முடித்த நபர்கள் இந்த பணியில் சேர விண்ணப்பிக்கலாம். சம்பளம் 55,200 – 99,750 வரை வழங்கபடுகிறது. செப்.30 விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இங்கு <