News March 13, 2025
சிறுநீரகங்களை கவனியுங்கள்

நம் உடலின் மிக ஆதாரமான இரண்டு செயல்பாடுகள் செரிமானமும் கழிவுநீக்கமும். இந்த இரண்டில் ஏற்படும் சிறு பாதிப்பும், போதுமான கவனிப்பு அளிக்கப்படாத நிலையில் நம் ஆரோக்கியத்துக்கு ஆபத்தாகி விடலாம். குறிப்பாக, உடலின் கழிவுநீக்க செயல்பாட்டில் முதன்மையாக விளங்கும் சிறுநீரகங்களை சரியாக பராமரிக்கவில்லை எனில், அதற்கு நாம் கொடுக்கும் விலை கடுமையானதாக இருக்கும். ஆகவே, அலட்சியத்தை கைவிட்டு ஆரோக்கியம் பேணுங்கள்.
Similar News
News March 5, 2026
தங்கம் விலை ₹5,240 குறைந்தது

போர் சூழலுக்கு நடுவிலும் தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வருவது நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த 5 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹5,240 குறைந்துள்ளது. மார்ச் 1-ல் 22 கேரட் தங்கம் 1 சவரன் ₹1,26,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, ₹1,20,960-ஆக சரிந்துள்ளது. இதே காலக்கட்டத்தில் வெள்ளி விலை கிலோவுக்கு ₹35,000 சரிந்து ₹2.95 லட்சத்திற்கு விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
News March 5, 2026
கான்ஸ்டன்டைன் ரவீந்திரனை திமுக தேர்வு செய்தது எப்படி?

திமுகவின் பேச்சாளரான கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ராஜ்யசபா வேட்பாளராக தேர்வானது பலருக்கும் ஆச்சரியம் அளித்துள்ளது. எனினும் அவர் தேர்வானதற்கு கிறிஸ்துவ மீனவ சமூகத்தை சார்ந்தவர் என்பது முக்கிய காரணமாம். விஜய்யின் அரசியல் வருகை மீனவ சமூக மக்கள் மத்தியில் தாக்கம் ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படும் நிலையில், அம்மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
News March 5, 2026
நாளை சனிப் பெயர்ச்சி.. 4 ராசிக்கு எச்சரிக்கை

சனி பகவான் நாளை (மார்ச் 6) கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைவதால் 4 ராசியினருக்கு சிக்கல் ஏற்படுமாம். *மீனம்: தேவையற்ற அலைச்சல், மன உளைச்சல், வேலைப் பளு ஏற்படலாம். *மேஷம்: பண பரிமாற்றம் செய்யும்போது எச்சரிக்கை தேவை, நிதி இழப்பு நேரிடலாம். *கும்பம்: குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் வர வாய்ப்பு. *சிம்மம்: எடுத்த காரியத்தில் தடை, தாமதம் ஏற்படும். கோர்ட் வழக்குகளை சந்திக்கக் கூடும்.


