News March 13, 2025
உதகை செல்ல கட்டுப்பாடு விதித்த நீதிமன்றம்!

உதகைக்கு வரும் வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி உதகைக்கு வார நாளில் 6000, வார இறுதியில் 8000 வாகனங்கள் மட்டுமே இயக்க வேண்டும். அரசுப்பேருந்துகள், ரயில்களில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு கிடையாது. உள்ளூர், விவசாய பொருட்கள் எடுத்து செல்லும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு இல்லை. இந்த கட்டுப்பாடுகள் ஜூன் வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 21, 2025
நீலகிரி காவலர்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம்

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா தலைமையில் இன்று காவலர்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டமானது நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எடுத்துக் கூறினார்.
News August 21, 2025
போக்சோ மற்றும் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை தாலுக்கா, குன்னூர் தாலுக்கா, கூடலூர் தாலுக்கா, கோத்தகிரி தாலுக்கா, பந்தலூர் தாலுக்கா, குந்தா தாலுக்கா, போன்ற ஆறு தாலுகாவிலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் பிரதான சாலைகள் மற்றும் பள்ளிகளில், இன்று நீலகிரி மாவட்ட காவல் துறையின் சார்பாக போக்சோ மற்றும் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வை அனைத்து பகுதிகளிலும் ஏற்படுத்தினர்.
News August 21, 2025
நீலகிரி: வாட்ஸ்அப்பில் சிலிண்டர் புக்கிங் எப்படி?

மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை ஈசியாக புக் செய்யலாம்.ஷேர் பண்ணுங்க!