News March 13, 2025
போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 263 பேரின் லைசென்ஸ் ரத்து

சேலம் சரகத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் இயக்கும் டிரைவர்களின் லைசென்ஸ் ரத்துச் செய்யப்பட்டு வருகிறது. சேலம், தருமபுரியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டிய 263 பேரின் லைசென்ஸ் 3 மாதத்திற்கு ரத்துச் செய்து வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை. பர்மிட் இல்லாமல் இயங்கிய வாகனங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
Similar News
News September 12, 2025
சேலம் விவசாயிகள் கவனத்திற்கு!

இ-வாடகை கைபேசி செயலி மூலம் வேளாண்மைப் பொறியியல் துறையின் சார்பில் வேளாண் இயந்திரங்கள் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். விவசாயிகள் தங்கள் கைபேசியில் உழவர் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள இ-வாடகை செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது வேளாண்மைப் பொறியியல் துறையின் இணையதளம் https://mts.aed.tn.gov.in/evaadagai விண்ணப்பிக்கலாம்
News September 12, 2025
சேலம் அரசு ஐடிஐகளில் நேரடி சேர்க்கை மேலும் நீட்டிப்பு!

சேலம் மாவட்டத்தில் கோரிமேடு இருபாலர் ஐடிஐ, மகளிர் ஐடிஐ, மேட்டூர் ஐடிஐ, கருமந்துறை மகளிர் ஐடிஐ என 4 அரசு ஐடிஐக்கள் செயல்பட்டு வருகிறது. இந்த ஐடிஐக்களில் நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் செப்.30- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐடிஐயில் சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் அரசின் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.
News September 12, 2025
சேலம்: ரிசர்வ் வங்கி வேலை விண்ணப்பிப்பது எப்படி?

▶️சேலம் மக்களே இந்திய ரிசர்வ் வங்கியில் 120 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
▶️இதற்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது
▶️இப்பணிக்கு ஆன்லைன் தேர்வு,நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்
▶️ https://ibpsreg.ibps.in/rbioaug25/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
▶️ செப்.30ஆம் தேதியே கடைசி நாளாகும்
▶️வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!