News March 13, 2025

ஊட்டி, கொடைக்கானல் செல்ல கட்டுப்பாடு…!

image

கோடைகாலத்தில் ஊட்டி, கொடைக்கானலில் கூட்ட நெரிசலைக் குறைக்க சென்னை ஐகோர்ட் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. கொடைக்கானலில் வார நாட்களில் நாளொன்றுக்கு 4,000 வாகனங்களும், வார இறுதி நாட்களில் நாளொன்றுக்கு 6,000 வாகனங்களும் மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்படும். அதேபோல், ஊட்டிக்கு வார நாட்களில் 6,000 வாகனங்களும் வார இறுதியில் 8,000 வாகனங்களுக்கும் அனுமதி வழங்கப்படும். இது ஜூன் வரை அமலில் இருக்கும்.

Similar News

News March 6, 2026

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.05) இரவு 10 முதல் இன்று (மார்ச்.06) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 6, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News March 6, 2026

‘US தாக்கினால் இந்தியாவை குறை சொல்ல முடியாது’

image

ஈரான் போர் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு இந்தியாவை குற்றம்சாட்டுவது நியாயமற்றது என்று பாஜக தலைவர் அமித் மாளவியா விமர்சித்துள்ளார். அவரது X பதிவில், இச்சம்பவம் இந்திய கடற்கரையிலிருந்து சுமார் 250 nautical miles தூரத்தில், சர்வதேச கடலில் நடந்ததாக கூறப்படுகிறது. சர்வதேச கடல் சட்டப்படி அந்த பகுதியில் நடந்த செயல்களுக்கு இந்தியாவுக்கு பொறுப்பு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!