News March 13, 2025

இந்தியாவில் அழியும் மொழிகள்

image

உலகில் அதிக மொழிகள் பேசப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். ஆனால், கடந்த 50 ஆண்டுகளில், இங்கு பேசப்பட்டு வந்த மொழிகளில் 220 அழிந்துவிட்டதாக Central Institute of Indian Languages கூறுகிறது. மேலும், 197 மொழிகள் அழிந்து வருவதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. இத்தனை மொழிகள் வேகமாக அழிவதற்கு ஹிந்தியின் ஆதிக்கமே காரணம் என்று விமர்சிக்கப்படுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Similar News

News March 18, 2026

BREAKING: அதிமுகவுடன் சேர்ந்தார்

image

OPS திமுகவில் இணைந்ததால், அதிருப்தியடைந்த அவரின் தீவிர ஆதரவாளர்கள் பலர் மீண்டும் தாய் கழகமான அதிமுகவிலேயே இணைந்து வருகின்றனர். அந்த வகையில், OPS அணியை சேர்ந்த திருநெல்வேலி மாவட்ட செயலாளர் சிவலிங்கமுத்து தலைமையில் பலர் EPS முன்னிலையில் மீண்டும் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். மேலும், OPS உடன் பயணித்த இன்னும் சில தலைவர்கள் அதிமுகவுக்கு வரவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

News March 18, 2026

ஸ்டாலினிடம் நேரடியாக டீலிங் செய்யும் திருமா

image

தொகுதிப்பங்கீட்டு விவகாரத்தில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்டு திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. ஆனால், திமுக தொகுதிப்பங்கீட்டு குழுவோ, அக்கட்சிகள் கேட்கும் தொகுதிகளை தர மறுக்கின்றன. இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்கும் திருமாவளவன், இனி திமுக குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை; ஸ்டாலினிடம் மட்டுமே நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 18, 2026

ஸ்டாலினுடன் தொடர்வது ஏன்? வைகோ புதிய விளக்கம்

image

வேண்டா வெறுப்பாக திமுகவுடன் மதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் தொடர்வதாக EPS விமர்சித்து வருகிறார். இந்நிலையில், சென்னையில் மதிமுக தேர்தல் அறிக்கையை வைகோ வெளியிட்டார். அப்போது பேசிய அவர், கருணாநிதியின் இறுதிக் காலத்தில் அவருக்கு அளித்த வாக்குறுதிக்காக ஸ்டாலினுடன் உள்ளேன் என்றார். அதை நிறைவேற்றும் வகையில் மதிமுக செயல்படுவதாகவும், தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக வெல்வது உறுதி என்றும் கூறினார்.

error: Content is protected !!