News March 13, 2025

விவசாயிகள் குறைதீர் கூட்ட தேதி அறிவிப்பு

image

மார்ச் மாத இரண்டாம் வாரத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 18ஆம் தேதி காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்துத் துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளைத் தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார். Share It.

Similar News

News September 13, 2025

சிவகங்கை: ரிசர்வ் வங்கி வேலை விண்ணப்பிப்பது எப்படி?

image

▶️சிவகங்கை மக்களே இந்திய ரிசர்வ் வங்கியில் 120 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
▶️இதற்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது
▶️இப்பணிக்கு ஆன்லைன் தேர்வு,நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்
▶️ https://ibpsreg.ibps.in/rbioaug25/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
▶️ செப்.30ஆம் தேதியே கடைசி நாளாகும்
▶️வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 13, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கல்

image

கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் இன்று (13.9.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தலைமையில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திசிதம்பரம் முன்னிலையில் அமைச்சர் பெரியகருப்பன் பார்வையிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

News September 13, 2025

சிவகங்கை: AI தொழில் நுட்பம் மூலம் இறந்த யானையின் சிலை

image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே குன்றக்குடி சண்முகநாதசுவாமி கோவிலுக்கு சொந்தமான சுப்புலெட்சுமி என்ற யானை கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 13 ந் தேதி எதிர்பாராத விதமாக தீ விபத்தில் சிக்கி இறந்துவிட்டது. அதற்கு நினைவாக குன்றக்குடியில் சிலை அமைக்க இன்று, செப்டம்பர் 13, பூமி பூஜை செய்யப்பட்ட நிலையில், யானையின் AI தொழில் நுட்ப சிலை வடிவமைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!