News March 13, 2025
திருப்பூர்: வாழைத்தோட்டத்து அய்யன் கோயில்

திருப்பூர், அய்யம்பாளையத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற வாழைத்தோட்டத்து அய்யன் கோயில். மிகவும் சக்திவாய்ந்த அய்யனை வழிபட்டால், தீராத நோய்களும், தோஷங்களும் நீங்குமாம். இங்கு பிரசாதமாக வழங்கப்படும் புற்றுமண், பாம்பு விஷத்தை முறிக்கும் வல்லமை கொண்டதாம். அய்யன் கோயிலில் கிடைக்கும் புற்றுமண்னை சிறிது எடுத்து வீடுகளிலும், வயல்வெளிகளிலும் தெளித்தால் அங்கு விஷ ஜந்துக்கள் போன்றவை அண்டாது என்பது நம்பிக்கை.
Similar News
News August 24, 2025
சிசிடிவி கேமரா பொருத்த போலீசார் அறிவுரை

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள், குடியிருப்புகள், தோட்டத்து சாலைகள், ஆகிய பகுதிகளில் திருட்டு, கொலை, கொள்ளை, நடக்காமல் இருக்க பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகள் தோட்டத்து சாலைகள் முதியவர்கள் குடியிருக்கும் வீடுகளில் CCTV கேமராக்கள் பொருத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 24, 2025
திருப்பூர்: குறைந்த விலையில் பைக், கார்!

திருப்பூரில் காவல்துறையால் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ள 4 மற்றும் 2 சக்கர வாகனங்கள் என மொத்தம் 35 வாகனங்கள் ஏலக்குழுவினரால் வரும் ஆகஸ்ட்.26 காலை 10 மணியளவில் ஏலம் விடப்பட உள்ளது. அவினாசி, மடத்துபாளையம் ரோடு. சிவக்குமார் ரைஸ்மில் காம்பவுண்டில் உள்ள திருப்பூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் நடைபெறும் ஏலத்தில், விருப்பமுள்ளவர்கள் ஆதார் அட்டையுடன் விண்ணப்பிக்குமாறு காவல்துறை அறிவிப்பு.
News August 24, 2025
காங்கேயத்தில் குடும்ப பிரச்சனையில் பெண் தற்கொலை

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த சிவன்மலை சரவணா நகரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (28). இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் சுபாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது, ஜெயலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.