News March 31, 2024

நாகை அருகே சுடச்சுட பிரியாணி

image

வேளாங்கண்ணியில் உதவிக்கரங்கள் அறக்கட்டளை சார்பில்  ஈஸ்டர் பெருவிழா நடைபெற்றது. இதில் மும்மதத்தினர் பிரார்த்தனை செய்யப்பட்டு 1000 ஏழை எளியோருக்கு சுட சுட பிரியாணி வழங்கப்பட்டது. இதில் நிறுவனர் ஆண்டோ பிராங்கிளின் ஜெயராஜ் ,பங்குத்தந்தை அற்புதராஜ், ரஜதநீலகண்டன், ஜமாத் ஜகபர் சாதிக் ,ஜூலியட் அற்புதராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

Similar News

News August 15, 2025

நாகையில் 193 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

image

நாகை மாவட்டத்தில் 193 கிராம ஊராட்சிகளில் இன்று (ஆக.15) சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில், ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், தூய்மையான குடிநீர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்டவை பற்றி அலோசிக்கப்பட உள்ளது. அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளர்.

News August 14, 2025

நாகை மக்களுக்கு ரூ.5 லட்சத்தில் இலவச காப்பீடு !

image

நாகை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். காப்பீட்டு அட்டையை பெற எளிய வழி, உங்கள் பகுதியில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களோடு மருத்துவ அடையாள அட்டை உடனே பதிவு செய்து பெற முடியும். மேலும் நாகை ஆட்சியர் அலுவலகத்திலும் பதிவு செய்து வாங்கலாம். SHARE IT NOW!

News August 14, 2025

நாகை மக்களுக்கு ஆட்சியர் அழைப்பு

image

நாட்டின் 79வது சுதந்திர தின விழா நாளை ஆக.15ம் தேதி நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், நாகை மாவட்ட விளையாட்டரங்கில் நாளை காலை 9.05 மணிக்கு நடைபெறும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில், மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவி வழங்குதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளது. இதில், பொதுமக்கள் பங்கேற்று சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் அழைத்துள்ளார்.

error: Content is protected !!