News March 13, 2025
விஜய் காரை மறித்த தவெகவினர்

சென்னை பனையூரில் விஜய்யின் காரை தவெகவினர் மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திற்கு மாவட்டச் செயலாளராக ஆர்.கே.மணியை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்த தொண்டர்கள் காரை மறித்து விஜய்யிடம் மனு அளித்தனர். திருவொற்றியூர் பகுதியை தனி மாவட்டமாக பிரித்து அதற்கு செயலாளரை நியமிக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். நடு ரோட்டில் காரை நிறுத்திய விஜய், அவர்களிடம் மனுவைப் பெற்றுக்கொண்டார்.
Similar News
News April 11, 2026
இரட்டை இலைக்கு எதிராக MGR-ன் தீவிர விசுவாசி

MGR மீதான அன்பால், தான் நடித்த படங்கள் மூலம் அதிமுகவின் கொள்கை, கட்சி கொடியை மக்களிடம் கொண்டு சேர்ந்தவர் <<19621059>>ராமராஜன்<<>>. ஜெ., உயிருடன் இருக்கும்வரை, தேர்தல் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலில் ராமராஜன் பெயர் முதலிடத்தில் இருக்கும். அந்த அளவுக்கு அதிமுகவின் விசுவாசியாக இருந்த அவர், கட்சியில் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் தான் இரட்டை இலைக்கு எதிராக <<19621059>>பிரசாரம் <<>>செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
News April 11, 2026
தங்கம் விலை இன்று குறைந்தது.. மக்களுக்கு நிம்மதி

<<19621607>>தங்கம் விலை<<>> இன்று சவரனுக்கு ₹200 குறைந்த நிலையில், இந்த வார வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. ஏப்ரல் தொடங்கியதில் இருந்து தங்கம் விலை கண்ணாமூச்சி ஆட்டம் ஆடினாலும், சந்தை நிலவரம் மக்களுக்கு நிம்மதியையே கொடுத்துள்ளது. ஏப்.1-ல் 22 கேரட் தங்கம் 1 சவரன் ₹1,12,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, ₹400 மட்டும் அதிகரித்து ₹1,12,800-க்கு விற்பனையாகி வருகிறது.
News April 11, 2026
ஈரான் உச்ச தலைவருக்கு என்ன ஆச்சு?

ஈரானின் உச்சத்தலைவர் மொஜ்தபா கமேனி போரில் காயமடைந்ததாக கூறப்பட்டாலும், பொதுவெளியில் இதுவரை தென்படவில்லை. இது மர்மமாக இருந்த நிலையில், அடையாளம் காண முடியாத அளவுக்கு அவருக்கு முகத்திலும், காலிலும் காயம் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் தான் அவர் முகத்தை வெளிக்காட்டாமல், போனில் `வாய்ஸ் கால்’ வழியாக மட்டுமே அரசுக்கும் ராணுவத்துக்கும் வழிகாட்டல்களை வழங்கி வருவதாக கூறப்படுகிறது.


