News March 13, 2025

உங்களின் நகங்கள் ‘இப்படி’ இருக்கா?

image

நகத்தின் கலரை வைத்தே ஒருவரின் ஆரோக்கியத்தை சொல்லலாம். வெளிர் நகங்கள்: ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகையாக இருக்கலாம் *நடுவில் வெள்ளை கலர்: கல்லீரல் பிரச்சனையை குறிக்கிறது *கருப்பு கோடுகள்: சரும புற்றுநோயின் அறிகுறி *மஞ்சள் நிறம்: நகத்தில் பூஞ்சை தொற்று *வெள்ளை புள்ளிகள்: நகம் முழுவதும் இருந்தால், துத்தநாகக் குறைபாட்டை குறிக்கிறது. ஆரோக்கியமான நகங்களின் பளபளப்பாக, ஓரங்களில் வெள்ளையாக இருக்கும்.

Similar News

News March 14, 2025

₹310 கோடியில் வேளச்சேரியில் புதிய மேம்பாலம்!

image

சென்னை வேளச்சேரியில் ₹310 கோடியில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும் என தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி வரை 3 கி.மீ தொலைவுக்கு புதிய மேம்பாலம் அமையவுள்ளதாகவும், இதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News March 14, 2025

புதிய ஆசிரியர் பணியிடங்கள்

image

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அரசுப்பள்ளிகளில் ரூ.160 கோடி மதிப்பீட்டில் கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் 2,000 அரசுப் பள்ளி மாணவர்கள் இந்திய அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் படிக்க ஏற்பாடு செய்யப்படும். மாணவர்களின் கல்வித் திறனை ஊக்குவிக்க, நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

News March 14, 2025

மூத்த குடிமக்களுக்காக அன்புச்சோலை திட்டம்

image

மூத்த குடிமக்களுக்காக அன்புச்சோலை திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ₹10 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அன்புச்சோலை திட்டம் மூலம் 25 இடங்களில் முதியோர் பகல் நேர பராமரிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!