News March 13, 2025
பெற்றோர்களுக்கு மாநகர காவல்துறை அறிவுறுத்தல்

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவின்படி மாநகர பகுதிகளில் சாலை விபத்துக்கள் ஏற்படுவதைதடுக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், இன்று(மார்ச்.13) மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில், 18 வயது பூர்த்தியடையாத தங்கள் குழந்தைகள் வாகனங்களை ஓட்ட அனுமதிக்க வேண்டாம் என பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News August 25, 2025
நெல்லையில் இன்று கல்வித்துறை அமைச்சர் முக்கிய ஆலோசனை

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் நாளை காலை 11:15 மணி அளவில் பாளை நேருஜி கலையரங்கில் மாநில அளவிலான அடைவு தேர்வு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கல்வித்துறை அலுவலர்கள்மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
News August 25, 2025
முன்னீர்பள்ளம் தீ விபத்தில் புதிய தகவல்

திருநெல்வேலி ஆரைகுளத்தில் மகனின் திருமணத்திற்கு அழைக்காத கோபத்தில் தந்தை, மனைவி மற்றும் மற்றொரு மகனின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூரம் நடந்துள்ளது. இதில் மனைவி மற்றும் மகன் உயிரிழந்த நிலையில் 50 % காயங்களுடன் தந்தை உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார். மூத்த மகனுக்கு திருமணமாகி 4 நாட்களே ஆன நிலையில் மனைவியுடன் அவர் கன்னியாகுமரிக்கு சென்றுள்ளார். குடும்பத் தகராறு இத்தகைய கொடூரத்தை அரங்கேற்றியது.
News August 25, 2025
மனைவியை ஆற்றில் மூழ்கடித்துக் கொன்ற கணவர்

அம்பாசமுத்திரத்தில் செல்லையா(31) தனது மனைவி காவேரியை(28) தாமிரபரணி ஆற்றில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு, போலீசில் சரணடைந்தார். மனநலம் பாதிக்கப்பட்ட காவேரியுடன் குடும்ப தகராறு இருந்ததாக தெரிகிறது. போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் காவேரியின் உடலை தேடி வருகின்றனர். வெளிச்சமின்மை காரணமாக தேடுதல் நிறுத்தப்பட்டு, நாளை மீண்டும் தொடரும். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.