News March 13, 2025
ஒரு லிட்டர் பால் விலை ₹80

ஹட்சன் நிறுவனம் அதன் ஆரோக்யா பாலின் விலையை உயர்த்துவதாக பால் முகவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், நிறை கொழுப்பு பாலின் விலை லிட்டருக்கு ₹76இல் இருந்து ₹80ஆக உயர்த்தப்படுவதாகவும், 400 கிராம் தயிரின் விலை ₹32இல் இருந்து ₹33ஆக உயர்த்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் பால் விலை உயர்த்தப்பட்ட நிலையில், ஒரே மாதத்தில் மீண்டும் விலை உயர்ந்துள்ளது.
Similar News
News March 13, 2025
அடித்து ஆடும் இந்திய மாஸ்டர்ஸ் அணி

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் T20 தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இன்று இந்தியா-ஆஸ்திரேலியா மோதுகின்றன. ராய்பூரில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற AUSM அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய INDM அணி, AUSM பவுலர்கள் வீசும் பந்துகளை நாலாபுறமும் பறக்க விடுகின்றனர். சச்சின் 39* (25), யுவராஜ் 19* (10) களத்தில் உள்ளனர். INDM அணி தற்போது வரை 9 ஓவர்களில் 91 ரன்கள் குவித்துள்ளது.
News March 13, 2025
செவ்வாய் பெயர்ச்சி: ஜாக்பாட் அடிக்கும் 3 ராசிகள்

செவ்வாய் பகவான் கடந்த பிப்.24-ம் தேதி மிதுன ராசியில் வக்கிர நிவர்த்தி அடைந்தார். இதனால் பின்வரும் 3 ராசிகள் நற்பலன்கள் பெறுவார்கள்: *மேஷம்: குடும்பத்தில் குழப்பங்கள் தீரும், பணியில் முன்னேற்றம், மனப் பிரச்னைகள் தீரும் *கடகம்: சிக்கல்கள் குறையும், திருமண யோகம், புதிய வீடு, வாகன வாய்ப்பு, தன்னம்பிக்கை, தைரியம் கூடும் *சிம்மம்: நிதி ரீதியான முன்னேற்றத்தால் கடன்சுமை குறையும், வெளிநாட்டு பயண வாய்ப்பு.
News March 13, 2025
மது பாட்டிலுக்கு ரூ.30 வரை கூடுதல் விலை: ED

<<15749508>>டாஸ்மாக்<<>> போக்குவரத்து ஒப்பந்தத்திலும் முறைகேடு நடந்துள்ளதாகவும், மதுபாட்டிலுக்கு 10 – 30 ரூபாய் வரை கூடுதலாக விற்பனை செய்ததற்கான ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ED தெரிவித்துள்ளது. பெரும் லாபத்திற்காக போலி கணக்குகளை செலவில் காட்டி மோசடி நடத்தப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டிய ED, மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் முக்கிய பங்குதாரர்கள் குறித்து விசாரித்து வருவதாக விளக்கம் அளித்துள்ளது.