News March 13, 2025
தொல்லியல் அறிஞர் மா.சந்திரமூர்த்தி மறைவு

தமிழக தொல்லியல் துறை முன்னாள் இணை இயக்குநரும், தொல்லியல் அறிஞருமான மா.சந்திரமூர்த்தி (80) உடல் அடக்கம் செய்யப்பட்டது. நாகையை சேர்ந்த இவர், கொற்கை, கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வுகள் மூலம் பல தனித்துவ அடையாளங்களைக் கண்டறிந்துள்ளார். நேற்று முன்தினம் மூச்சுத் திணறல் காரணமாக மறைந்த நிலையில், போரூரில் உள்ள வீட்டில் அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.
Similar News
News March 14, 2025
2,562 ஆசிரியர்கள் விரைவில் நியமனம்!

தமிழக பட்ஜெட்டில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார். அதன்படி, 2025-26ஆம் ஆண்டில் 1,721 முதுநிலை ஆசிரியர்களும், 841 பட்டதாரி ஆசிரியர்களும் விரைவில் பணியமர்த்தப்படுவார்கள் என, பட்ஜெட் உரையில்
அவர் குறிப்பிட்டார்.
News March 14, 2025
தவறுகளை மறைக்கவே ரூபாய் குறியீடு: இபிஎஸ் விமர்சனம்

3.50 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், தற்போது 40,000 பணியிடங்களை மட்டுமே நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளனர். அதுவும் இந்த பணியிடங்களை 9 மாதங்களில் எப்படி நிறைவேற்ற முடியும் என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக அரசு செய்த தவறுகளை மறைக்கவே ரூபாய் குறியீடு மாற்றப்பட்டுள்ளதாக விமர்சித்த அவர், திமுக அரசு மீது மக்கள் கோபத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
News March 14, 2025
எதிர்கால வளர்ச்சிக்கு அடித்தளம்: பாராட்டிய CM!

மகளிர் நலன் காக்கும் மாபெரும் திட்டங்கள், ததும்பி வழியும் தமிழ்ப் பெருமிதம் என தமிழக பட்ஜெட்டில் அனைவருக்குமான பல திட்டங்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்ற உயரிய நோக்கத்துடன் தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளத்தை இந்த பட்ஜெட் அமைத்து தந்துள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.