News March 13, 2025
மாநில தனிநபர் வருமானம் அதிகரிப்பு

தமிழ்நாட்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை முதல் முறையாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில், நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8%ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், தனிநபர் ஆண்டு வருமானம் ₹2.78 லட்சமாக அதிகரித்துள்ளது; இது தேசிய சராசரியைவிட 1.64 மடங்கு அதிகம் என்றும், சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் பட்ஜெட் அமையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 13, 2025
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு: ED

TASMAC தலைமை அலுவலகம், மதுபான ஆலைகளில் மார்ச் 6ம் தேதி நடத்திய சோதனை தொடர்பாக ED விளக்கம் அளித்துள்ளது. அதில், சோதனையில் ரூ.1,000 கோடி கணக்கில் வராதது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபான கொள்முதல் மூலம் பல்வேறு தனியார் நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த ED, TASMAC உயரதிகாரிகளுக்கு நெருக்கமானவர்களுக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
News March 13, 2025
ஒரே நாளில் 10 படங்கள் – சினிமா ரசிகர்களுக்கு ட்ரீட்…!

2 ரீ-ரிலீஸ் படங்கள் உட்பட 10 தமிழ் படங்கள் நாளை வெளியாக இருக்கிறது. ஸ்வீட் ஹார்ட், பெருசு, வருணன், ராபர், கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல், மாடன் கொடை விழா, குற்றம் குறை, டெக்ஸ்டர் ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன. அதேபோல், எம்.குமரன் S/O மகாலெட்சுமி, ரஜினி முருகன் ஆகிய படங்களும் ரி-ரிலீஸ் செய்யப்பட இருக்கின்றன. புதிய படங்கள் வெளியாக இருப்பது சினிமா ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்…!
News March 13, 2025
ஹோலி: ஒவ்வொரு கலருக்கும் காரணம் இருக்கு தெரியுமா?

வண்ணங்களின் திருவிழா என்றழைக்கப்படும் ஹோலி பண்டிகை நாளை கொண்டாடப்பட இருக்கிறது. இதில், ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை பூசி உற்சாகம் அடைவார்கள். அதில், சிவப்பு நிறம் அன்பு, வலிமை, புதிய தொடக்கத்தை குறிக்கிறது. இயற்கை, செழிப்பை குறிப்பது பச்சை நிறமாகும். மஞ்சள் வண்ணம் மகிழ்ச்சி, ஆரோக்கியத்தை காட்டுகிறது. இப்படியாக ஒவ்வொரு வண்ணம் பூசுவதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறதாம்.