News March 13, 2025
இது நவீன இந்தித் திணிப்பு : அன்புமணி காட்டம்

சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு <<15744608>>இந்தியில் <<>>மட்டும் பதிலளிப்பதற்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுவும் ஒரு நவீன இந்தித் திணிப்பு தான். இதை அனுமதிக்க முடியாது. இதற்கு எரிவாயு நிறுவனங்கள் தமிழ்நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் இந்தித் திணிப்பைக் கைவிட்டு, தமிழில் வாடிக்கையாளர் சேவை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News March 13, 2025
ஒரே நாளில் 10 படங்கள் – சினிமா ரசிகர்களுக்கு ட்ரீட்…!

2 ரீ-ரிலீஸ் படங்கள் உட்பட 10 தமிழ் படங்கள் நாளை வெளியாக இருக்கிறது. ஸ்வீட் ஹார்ட், பெருசு, வருணன், ராபர், கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல், மாடன் கொடை விழா, குற்றம் குறை, டெக்ஸ்டர் ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன. அதேபோல், எம்.குமரன் S/O மகாலெட்சுமி, ரஜினி முருகன் ஆகிய படங்களும் ரி-ரிலீஸ் செய்யப்பட இருக்கின்றன. புதிய படங்கள் வெளியாக இருப்பது சினிமா ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்…!
News March 13, 2025
ஹோலி: ஒவ்வொரு கலருக்கும் காரணம் இருக்கு தெரியுமா?

வண்ணங்களின் திருவிழா என்றழைக்கப்படும் ஹோலி பண்டிகை நாளை கொண்டாடப்பட இருக்கிறது. இதில், ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை பூசி உற்சாகம் அடைவார்கள். அதில், சிவப்பு நிறம் அன்பு, வலிமை, புதிய தொடக்கத்தை குறிக்கிறது. இயற்கை, செழிப்பை குறிப்பது பச்சை நிறமாகும். மஞ்சள் வண்ணம் மகிழ்ச்சி, ஆரோக்கியத்தை காட்டுகிறது. இப்படியாக ஒவ்வொரு வண்ணம் பூசுவதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறதாம்.
News March 13, 2025
நாளை காலை 9.30 மணிக்கு பட்ஜெட்

தமிழக அரசின் 2025-2026ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டினை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (14.03.2025) காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட் உரை தமிழ்நாடு முழுக்க 936 இடங்களில் நேரலை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அடுத்தாண்டு, தேர்தலையொட்டி இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் ஆகும் என்பதால் நடப்பு ஆட்சிக்கான கடைசி முழு பட்ஜெட் இதுவே ஆகும்.