News March 13, 2025
இந்தியில் வாடிக்கையாளர் சேவையா?

இண்டேன், பாரத் கேஸ், ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனங்கள் சமையல் எரிவாயு விற்பனை செய்து வருகின்றன. இந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கான இலவச தொலைபேசி அழைப்பில் (1800 2333 555) தொடர்பு கொண்டு, வாடிக்கையாளர்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்னை குறித்து புகார் அளித்தால், இந்தியில் பதிலளிக்கப்படுகிறதாம். இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள், உடனே தமிழில் சேவை வழங்க வலியுறுத்தியுள்ளனர்.
Similar News
News March 14, 2025
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.. ₹3 லட்சம் நிவாரணம்

சேலத்தில் பணியின்போது தண்ணீர் தொட்டியின் மீதிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சுப்ரமணி (55) என்பவரது குடும்பத்திற்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து சுப்ரமணியின் குடும்பத்திற்கு ₹3 லட்சம் நிதியுதவி வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார்.
News March 14, 2025
200% வரி விதிப்பு: டிரம்ப் அதிரடி

அமெரிக்க விஸ்கி மீது ஐரோப்பிய யூனியன் கூடுதல் வரி விதித்துள்ளதால், ஐரோப்பிய நாடுகளில் தயார் செய்யப்படும் ஒயின், ஷாம்பெயின் மற்றும் மதுபானங்களுக்கு 200% வரியை டிரம்ப் அறிவித்து அதிரடி காட்டியுள்ளார். அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் நாடுகள், அதிக வரி விதிக்கக் கூடாது என டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்த புதிய வரி விதிப்பு ஏப்.1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
News March 14, 2025
அடர் நிறத்தில் சிறுநீர் வெளியேறுகிறதா?

பித்தப்பையில் கல் இருந்தால், இரத்த ஓட்டத்தில் பிலிரூபின் (Bilirubin) அதிகரிக்கும். இதன் விளைவாக, அடர் நிறத்தில் சிறுநீர் வெளியேறும். பித்தப்பையிலிருந்து செல்லும் பித்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு, இரத்த ஓட்டத்தில் பித்தம் படியும். இதன் விளைவாக, சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் மாறும். மஞ்சள் காமாலைக்கு வழிவகுக்கும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் உடனே டாக்டரை அணுகுங்கள் மக்களே..!