News March 13, 2025

மகளிர் உரிமைத் தொகை உயருகிறதா?

image

மகளிர் உரிமைத்தொகை குறித்து பல்வேறு விவாதங்கள் சோஷியல் மீடியாவில் எழுந்துள்ளன. அதற்கு காரணம் நாளை தாக்கலாகும் TN Budget. புதுவையில் நேற்றைய பட்ஜெட்டின் போது இந்த நிதி ₹1,000லிருந்து ₹2,500 ஆக உயர்த்தப்பட்டது. கர்நாடகா, மகாராஷ்டிராவில் தலா ₹1,500, பஞ்சாபில் ₹1,200 வழங்கப்படும் நிலையில், இத்திட்டத்திற்கு வித்திட்ட தமிழகத்திலும் ₹2,500ஆக உயர்த்த வேண்டும் என்ற பேச்சு எழுந்துள்ளது.உங்கள் கருத்து என்ன?

Similar News

News March 12, 2026

1 சிலிண்டரின் விலை ₹4,000.. தமிழகத்தில் கலக்கம்

image

சிலிண்டர் விநியோக பிரச்னையால் தலைநகர் சென்னையிலுள்ள சிறு ஹோட்டல்கள் பல மூடப்பட்டுள்ளன. மேலும், பல பகுதிகளில் கள்ளச் சந்தையில் 1 சிலிண்டர் ₹4,000 வரை விற்கப்படுவதாக ஹோட்டல் உரிமையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால், உணவுப் பொருள்களின் விலையேற்ற வேண்டிய சூழல் இருப்பதாகவும் கூறும் அவர்கள், மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

News March 12, 2026

இந்தியாவின் விவகாரங்களில் USA தலையிடுவதா? ராகுல்

image

நாம் யாரிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டும் என்பதை அமெரிக்கா தீர்மானிப்பது சரியானது அல்ல என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். லோக்சபாவில் பேசிய அவர், யாரிடம் வாங்க வேண்டும், யாரிடம் வாங்கக் கூடாது என்று இந்தியாவுக்கு ஏன் அமெரிக்க அதிபர் அனுமதி கொடுக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு அமெரிக்காவுடன் சமரசம் செய்து கொண்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

News March 12, 2026

சிறுமிகளுக்கு எதிரான ரேப்… NCW-ல் அதிமுக MP புகார்

image

தமிழகத்தில் தொடர்ந்து வரும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தில் (NCW) அதிமுக MP இன்பதுரை புகார் அளித்துள்ளார். தூத்துக்குடி, மதுராந்தகம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல பகுதிகளில் சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக சிறப்பு குழுவை அனுப்பி விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!