News March 13, 2025
4 மணி நேரத்தில் காயத்தை குணமாக்கும் ஹைட்ரோஜெல்

மனித தோலுக்கு ஒத்த பண்புகளை கொண்ட செயற்கைத்தோலை ஃபின்லாந்தின் ஆல்டோ பல்கலை., விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஹைட்ரோ ஜெல் என அழைக்கப்படும் இந்த பொருள், உடலில் ஏற்படும் காயத்தை 4 மணி நேரத்தில் 90% அளவுக்கு குணப்படுத்திவிடுமாம். அதிகபட்சம் 24 மணி நேரத்திற்குள் முழுமையாக காயம் ஆறிவிடுமாம். இந்த புதிய கண்டுபிடிப்பு செயற்கைத்தோல் தொழில்நுட்பத்திற்கு புத்துயிர் கொடுத்திருக்கிறது.
Similar News
News March 14, 2025
அடர் நிறத்தில் சிறுநீர் வெளியேறுகிறதா?

பித்தப்பையில் கல் இருந்தால், இரத்த ஓட்டத்தில் பிலிரூபின் (Bilirubin) அதிகரிக்கும். இதன் விளைவாக, அடர் நிறத்தில் சிறுநீர் வெளியேறும். பித்தப்பையிலிருந்து செல்லும் பித்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு, இரத்த ஓட்டத்தில் பித்தம் படியும். இதன் விளைவாக, சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் மாறும். மஞ்சள் காமாலைக்கு வழிவகுக்கும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் உடனே டாக்டரை அணுகுங்கள் மக்களே..!
News March 14, 2025
பயணிகளின் கவனத்திற்கு.. TNSTC சிறப்பு அறிவிப்பு

பவுர்ணமி மற்றும் வார இறுதி நாள்களையொட்டி கூட்ட நெரிசலைத் தவிர்க்க இன்றும், நாளையும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக TNSTC அறிவித்துள்ளது. அதன்படி, கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 270 பேருந்துகளும், நாளை 275 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. குறிப்பாக இவை திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், நெல்லை, மதுரை, கோவை, சேலம், குமரி, திருப்பூர் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 14, 2025
அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

2025 – 2026 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கலாக உள்ள நிலையில், ADMK எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் அறையில் காலை 8.30 மணிக்கு இக்கூட்டம் நடைபெறவுள்ளது. காலை 9.30 மணிக்கு பட்ஜெட் தாக்கலாகிறது. அதன் பின்னர், மாலை 6.30 மணிக்கு திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற இருப்பது கவனிக்கத்தக்கது.