News March 13, 2025
இதுக்கா கல்யாணத்தையே நிப்பாட்டுவாங்க!

சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக கூறப்படும் கல்யாணத்தை, இதற்கெல்லாமா நிறுத்துவாங்க எனத் தோன்றுகிறது. தனது வருங்கால கணவர் தன்னிடம் சொல்லாமல், அவரின் தாயுடன் சேர்ந்து வீடு வாங்கியதால், அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் கல்யாணத்தை நிறுத்தி விட்டார். ‘கனவு இல்லத்தை நாங்கள் இருவரும் சேர்ந்து வாங்குவோம் என எதிர்பார்த்தேன், அவரின் தாயுடன் எப்படி நான் வீட்டை பகிர்வது என்ற கேள்வியை அப்பெண் முன்வைக்கிறார்.
Similar News
News March 8, 2026
செல்வாக்கை இழந்ததால், ₹5000 கொடுத்த திமுக: EPS

அந்தியூரில் பிரசாரம் மேற்கொண்ட EPS, திமுக MLA-வின் ஹாஸ்பிடலில் ஏழைகளிடம் கிட்னி திருடப்பட்டதாக குற்றம் சாட்டினார். திமுகவினர் போதைப்பொருள் விற்பதால், சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருகிறது என்றும், திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் ₹5 லட்சம் கோடி கடன் வாங்கி, மக்கள் மீது வரிச்சுமையை அதிகரித்துள்ளதாகவும் விமர்சித்தார். மேலும், மக்களிடம் செல்வாக்கை திமுக இழந்ததால் தான் ₹5000 வழங்கி இருப்பதாக விமர்சித்தார்.
News March 8, 2026
TN-ல் NDA கூட்டணி ஆட்சி உறுதி: அமித்ஷா

மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் வரும் தேர்தலில் NDA கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என அமித்ஷா தெரிவித்துள்ளார். டேராடூனில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்கள் விரோத அரசுகளை வெளியேற்ற மக்கள் தயாராகி வருவதாக கூறினார். தமிழகத்தில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என EPS கூறி வரும் நிலையில், அதற்கு முரணாக அமித்ஷா பேசி வருவது பேசுபொருளாகியுள்ளது.
News March 8, 2026
விஜய் மனைவிக்கு திமுகவில் முதல் ஆதரவு வந்தது

விஜய் மனைவி சங்கீதாவுக்கு திமுகவில் இருந்து வெளிப்படையாக ஆதரவு வந்துள்ளது. சங்கீதாவிற்கு அவரது கணவர் வீட்டில் வசிக்கும் உரிமையை சட்டம் தந்திருக்கிறது; காவல்துறையின் உதவியுடன் வீட்டிற்குள் நுழையலாம், அதனை கணவரால் (விஜய்) தடுக்க இயலாது என்று திமுக எம்பியான சல்மா கூறியுள்ளார். விமன் ஹெல்ப்லைன் 181 வழியாக சட்ட உதவி கோர அனைத்துப் பெண்களுக்கும் உரிமை உண்டு எனவும் அட்வைஸ் கொடுத்துள்ளார்.


