News March 13, 2025
கரூரில் இரு நாட்கள் பறவை கணக்கெடுப்பு பணி

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு வனத்துறை சார்பில், கடந்த வாரம் ஈரநிலம் கணக்கெடுப்பு முடிந்த நிலையில் வரும், 15, 16 தேதிகளில் நிலப்பரப்புகளில் பறவை கணக்கெடுப்பு பணி மீண்டும் நடக்கிறது. இதில் பறவை, உயிரியல் மற்றும் விலங்கியல் வல்லுனர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளலாம் மேலும் விபரங்களுக்கு, வனச்சரக அலுவலர்கள் முரளிதரன் எண், 91767 68768, கனகராஜ் எண், 97885 78344 தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தனர்.
Similar News
News November 12, 2025
வாக்கு சாவடி நிலை அலுவலர்களுக்கான ஆய்வு கூடடம்

கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இ.ஆ.ப., தலைமையில் இன்று (12.11.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026க்கான கணக்கீட்டு படிவத்தினை வழங்கும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
News November 12, 2025
கரூர் ரயில்வே நிலையத்தில் எஸ்.பி திடீர் ஆய்வு

கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வாகனச் சோதனை மற்றும் இரவு ரோந்து பணிகளை மாவட்ட எஸ்.பி ஜோஸ் தங்கையா நேரில் சென்று ரயில்வே நிலையத்தில் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதில் அவ்வழியாக வந்த சந்தேகிக்கப்படக்கூடிய வாகனங்கள் நிறுத்தப்பட்டு, ஓட்டுநர்களின் உரிமம் மற்றும் வாகன ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டு பொதுமக்களின் பாதுகாப்பையும், சட்ட ஒழுங்கையும் உறுதி செய்தார்.
News November 12, 2025
தமிழ் கனவு மூன்றாம் கட்ட நிகழ்ச்சி

கரூர் மாவட்டத்தில் தமிழ் கனவு நிகழ்வு மூன்றாம் கட்டமாக, தளவாபாளையம் M.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் நிகழ்ச்சியில் “அறிவின் வழியே மானுட விடுதலை” என்ற தலைப்பின் கீழ் வழக்கறிஞர் மதிவதனி, கல்லூரி மாணவ மாணவியர்களிடையே நாளை 13.11.2025 அன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ள நிலையில் சொற்பொழிவு ஆற்ற உள்ளார் என மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார்.


