News March 13, 2025

உலக தண்ணீர் தினத்தன்று கிராம சபை கூட்டம் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் 201 ஊராட்சிகள் அமைந்துள்ளன. மாவட்டம் முழுவதும் 201 ஊராட்சிகளிலும் மார்ச் 22 உலக தண்ணீர் தினத்தன்று நடக்கவுள்ள கிராம சபை கூட்டத்தில், மழை நீரை சேகரித்தல், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துதல் தொடர்பாக விவாதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றுவது குறித்தும், விவாதித்து தீர்மானம் நிறைவேற்றி செயல்படுத்த வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

Similar News

News March 3, 2026

அரியலூர்: 20 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

image

அரியலூர் மாவட்டத்தில், பல்வேறு நிலைகளில் இருந்த 20 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி உத்தரவிட்டுள்ளார். அரியலூர் தாசில்தாரராக தேவகியும், ஆண்டிமடம் தாசில்தாரராக சுசிலாவும், செந்துறை தாசில்தாரராக கோவிந்தராஜனும், உடையார்பாளையம் தாசில்தாரராக ஆனந்தவேல், அரியலூர் RDO நேர்முக உதவியாளராக வேலுமணியும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 3, 2026

அரியலூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News March 3, 2026

அரியலூர்: பாமகவினர் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கல்

image

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியினர் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கினர். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தலின்படியும், பாமக இணை பொது செயலாளர் வழிகாட்டலின் படியும், வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் தமிழக அரசை கண்டித்து இந்த துண்டு பிரசுரங்களை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!