News March 13, 2025
குமரி: 95 ஊராட்சிகளில் மார்ச் 22-ல் கிராம சபை கூட்டம்!

குமரி மாவட்டத்தில் 95 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் இம்மாதம் 22ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மழை நீரை சேகரித்தல், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துதல், நிலத்தடி நீரைச் செறிவூட்டுதல், தண்ணீர் மாசுபாட்டை தடுத்தல், நீர் நிலைகளின் ஆக்கிரமிப்பை அகற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
Similar News
News September 12, 2025
குமரி: ஆழ்கடல் மீன் பிடியில் நாமதான் ராஜா!

குமரி மாவட்ட மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடியில் இந்தியாவிலேயே சிறந்தவர்கள். இவர்களின் மீன்பிடி நுட்பங்கள், பல நாட்கள் கடலிலேயே தங்கி ஆழ்கடல் மீன்களை பிடிக்கும் வல்லமை ஆகியவை தனித்துவமானவை. டூனா, சுறா, மத்தி போன்ற பல்வேறு மீன் வகைகளைப் பிடித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யபடுகின்றது. இது குமரி மாவட்ட மக்களின் ஒரு அரிய திறமை.
News September 12, 2025
குமரியில் தற்செயல் விடுப்பு எடுத்து ஊழியர்கள் போராட்டம்

ஓய்வூதியம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி குமரி மாவட்டத்தில் வணிகவரி துறை சங்கம் ஊரக வளர்ச்சித் துறை, உதவி வேளாண்மை அலுவலர் சங்கம், உதவி தோட்டக்கலை அலுவலர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு துறை வாரி சங்கங்கள் இணைந்து நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் இந்த அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
News September 11, 2025
குமரி: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி

குமரி மக்களே வரும் 13ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13 வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய<