News March 13, 2025
தீராத நோய்களை தீர்க்கும் கோட்டை மாரியம்மன்

சேலம், பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது கோட்டை மாரியம்மன். சேலத்தில் அமைந்துள்ள 8 மாரியம்மன்களில் கோட்டை மாரியம்மன் தான் பெரியவள், சக்தி வாய்ந்தவள். இதனால் இங்கு வந்து வழிபாடு செய்தால் அம்மை, உடலில் உள்ள குறைபாடுகள், குழந்தை வரம் மற்றும் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. இதை மற்ற பக்தர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
Similar News
News March 14, 2025
முதலமைச்சர் குறித்து அவதூறு: பதிவிட்ட நபர் கைது

சேலம் கோரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் கலியுக கண்ணன் (50). இவர் அதே பகுதியில் டுடோரியல் சென்டர் நடத்திவருகிறார். இவரது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்டுள்ளார். இதுகுறித்து சைபர் கிரைம் காவல்துறையினருக்கு புகார் வந்ததை எடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
News March 13, 2025
சேலத்தில் இன்றைய இரவு ரோந்து விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொதுமக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச் 13 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
News March 13, 2025
சேலம் பாஜக மண்டல மாநாடு தேதி அறிவிப்பு

சேலம் பாஜக பெருங்கோட்ட பாரதிய ஜனதா மண்டல மாநாடு ஓமலூரில் ஏப்ரல் 19ஆம் தேதி முத்து மஹாலில் எதிரில் சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே நடைபெறுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து பாஜக பெருங்கோட்ட தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.