News March 13, 2025

இந்தியா–மொரிஷியஸ் நெருக்கத்திற்கு என்ன காரணம்?

image

இந்தியா – மொரிஷியஸ் இடையே சுவாரஸ்யமான பந்தம் இருக்கிறது. அந்நாட்டின் மொத்த மக்கள்தொகையான 12 லட்சத்தில் 70% பேர் இந்திய வம்சாவளியினர். இது தான் அந்நாட்டுடன் இந்தியா நெருக்கமாக இருக்க முக்கிய காரணம். 2005 முதல் மொரிஷியஸின் மிகப் பெரிய வர்த்தக பார்ட்னராக விளங்குகிறது இந்தியா. இந்திய பெருங்கடலில் இரு நாட்டு இறையாண்மையை பாதுகாக்க வேண்டும் என்பதும் நெருக்கத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.

Similar News

News March 13, 2025

இதுதான் எனது அடுத்த டார்கெட் – ஹர்திக் பாண்டியா

image

சாம்பியன்ஸ் டிராபி முடிஞ்சுபோச்சு, அடுத்ததா ஐபிஎல் பாக்கலாம்னு ஃபேன்ஸ் ரெடியாகிட்டாங்க. ஆனால், நட்சத்திர ஆட்டக்காரராக திகழும் ஹர்திக் பாண்டியா, அதற்கு ஒருபடி மேலாக டார்கெட் ஃபிக்ஸ் செய்துள்ளார். இந்தியாவுக்காக மேலும் பல ஐசிசி கோப்பைகளை வெல்ல விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். 2026ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை தூக்குவதுதான் தனது அடுத்த இலக்கு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

News March 13, 2025

விஜய் காரை மறித்த தவெகவினர்

image

சென்னை பனையூரில் விஜய்யின் காரை தவெகவினர் மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திற்கு மாவட்டச் செயலாளராக ஆர்.கே.மணியை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்த தொண்டர்கள் காரை மறித்து விஜய்யிடம் மனு அளித்தனர். திருவொற்றியூர் பகுதியை தனி மாவட்டமாக பிரித்து அதற்கு செயலாளரை நியமிக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். நடு ரோட்டில் காரை நிறுத்திய விஜய், அவர்களிடம் மனுவைப் பெற்றுக்கொண்டார்.

News March 13, 2025

இலச்சினை மாற்றம் குறித்து அரசு விளக்கம்

image

நாளை தாக்கல் ஆகவிருக்கும் தமிழக அரசு பட்ஜெட் பற்றி இன்று வெளியான இலச்சினையில் ‘₹’ எழுத்துக்கு பதில் ‘ரூ’ பயன்படுத்தப்பட்டிருந்தது. இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கும் தமிழக அரசு, 15 அலுவல் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியை முதல்வர் உபயோகித்து உள்ளதாகக் கூறியுள்ளது. இது தாய்மொழி தமிழ் மீதான பற்றை பறைசாற்றும் வகையில் இருப்பதாகவும் அரசியல் சாசனத்திற்கு எதிரானது அல்ல என்றும் அரசு விளக்கம் அளித்துள்ளது.

error: Content is protected !!