News March 13, 2025
பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு ரயில்

பௌர்ணமியை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதன்படி விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை செல்ல (TRAIN NO.06130) என்ற எண் கொண்ட ரயில் (மார்ச் 13) காலை 9.25 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு 11.10 க்கு சென்றடயும் அதே மார்க்கமாக திருவண்ணாமலையிலிருந்து (TRAIN NO.06129) என்ற எண் கொண்ட ரயில் 12.40 புறப்பட்டு விழுப்புரத்திற்கு 14.15 க்கு வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 23, 2025
100 நாள் வேலை நிதி, பாதியாக குறைப்பு

விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த ஆண்டு 1.78 கோடி மனித சக்தி நாட்களுக்கு ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு 50% குறைந்து, 81 லட்சம் வேலை நாட்களுக்கு ரூ.272 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், கிராமப்புற ஏழைகள் 100 நாள் வேலை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். நிதி குறைப்பு காரணமாக, வேலைவாய்ப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
News September 23, 2025
முதலமைச்சருக்கு ஓவியப் புத்தகம் அனுப்பிய ஓவியர்

விழுப்புரம் சிறுவந்தாடைச் சேர்ந்த ஓவியர் T.R. கோவிந்தராஜன் (87), தனது ஓவியப் புத்தகத்தையும் கடிதத்தையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் கோவிந்தராஜனின் கழகப் பற்றை கண்டு வியந்த முதல்வர், “தமிழ் மண்ணில் தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் நம் திராவிட முன்னேற்றக் கழகம் இன்னும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கும்” என சமூக வலைதளத்தில் பாராட்டியுள்ளார்.
News September 23, 2025
விழுப்புரம்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

விழுப்புரத்தில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!