News March 13, 2025
BREAKING: சென்னையில் குடும்பமே தற்கொலை

சென்னை திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூ.5 கோடி கடன் தொல்லை காரணமாக, டாக்டர் பாலமுருகன், அவரது மனைவி, இரண்டு மகன்கள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். 4 பேரின் உடலையும் மீட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News March 13, 2025
ஒரு லிட்டர் பால் விலை ₹80

ஹட்சன் நிறுவனம் அதன் ஆரோக்யா பாலின் விலையை உயர்த்துவதாக பால் முகவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், நிறை கொழுப்பு பாலின் விலை லிட்டருக்கு ₹76இல் இருந்து ₹80ஆக உயர்த்தப்படுவதாகவும், 400 கிராம் தயிரின் விலை ₹32இல் இருந்து ₹33ஆக உயர்த்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் பால் விலை உயர்த்தப்பட்ட நிலையில், ஒரே மாதத்தில் மீண்டும் விலை உயர்ந்துள்ளது.
News March 13, 2025
பார்க்கிங் தகராறு – பறிபோனது விஞ்ஞானியின் உயிர்

ஜார்க்கண்டைச் சேர்ந்த அபிஷேக் ஸ்வார்ன்கர், ஜெர்மனியில் விஞ்ஞானியாக பணியாற்றியவர். இந்தியா திரும்பிய அவர், மொஹாலியில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தில் திட்ட இயக்குநராக வேலை பார்த்து வந்தார். விஞ்ஞானி அபிஷேக் தான் வசித்து வந்த வீட்டின் முன், பைக்கை நிறுத்தக் கூடாது என அக்கம்பக்கத்தினர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, நடந்த மோதலில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.
News March 13, 2025
இந்த ‘₹’ குறியீட்டின் கதை தெரியுமா..?

தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறியுள்ள இந்திய ரூபாயின் குறியீட்டை திருச்சியை சேர்ந்த உதயகுமார் என்பவர் தான் வடிவமைத்தார். தேவநாகரி எழுத்து ‘र’ (ra) என்பதையும், நேர்கோடு இல்லாத ‘R’ ஆகியவற்றை சேர்த்து இது உருவாக்கப்பட்டது. தேவநாகரி சமஸ்கிருதம், ஹிந்தி, மராத்தி போன்ற இந்திய மொழிகளை எழுதப் பயன்படுத்தப்படும் எழுத்து முறை. இந்த குறியீடு ஜூலை 15, 2010ல் இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.