News March 13, 2025
பம்பை ஆற்றில் மூழ்கி கொத்தனார் உயிரிழப்பு

விழுப்புரத்தை அடுத்துள்ள டி.முத்தையால்பேட்டை, பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (37), கொத்தனாராக வேலைப் பாா்த்து வந்த இவா், நேற்று முன்தினம் முத்தையால்பேட்டை பம்பை ஆற்றுக்கு குளிக்கச் சென்றாா். அப்போது திடீரென நீரில் மூழ்கி செந்தில்குமாா் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Similar News
News September 23, 2025
விழுப்புரம்: B.E போதும்; ரூ.1.4 லட்சம் சம்பளம்

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <
News September 23, 2025
100 நாள் வேலை நிதி, பாதியாக குறைப்பு

விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த ஆண்டு 1.78 கோடி மனித சக்தி நாட்களுக்கு ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு 50% குறைந்து, 81 லட்சம் வேலை நாட்களுக்கு ரூ.272 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், கிராமப்புற ஏழைகள் 100 நாள் வேலை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். நிதி குறைப்பு காரணமாக, வேலைவாய்ப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
News September 23, 2025
முதலமைச்சருக்கு ஓவியப் புத்தகம் அனுப்பிய ஓவியர்

விழுப்புரம் சிறுவந்தாடைச் சேர்ந்த ஓவியர் T.R. கோவிந்தராஜன் (87), தனது ஓவியப் புத்தகத்தையும் கடிதத்தையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் கோவிந்தராஜனின் கழகப் பற்றை கண்டு வியந்த முதல்வர், “தமிழ் மண்ணில் தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் நம் திராவிட முன்னேற்றக் கழகம் இன்னும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கும்” என சமூக வலைதளத்தில் பாராட்டியுள்ளார்.