News March 13, 2025
ரயிலில் பெண் தவறவிட்ட 25 சவரன் நகை மீட்பு

காஞ்சிபுரம் வழியாக அரக்கோணத்திற்கு நேற்று (மார்.12) இரவு மின்சார ரயிலில் வந்த பெண் ஒருவர், தனது பையை ரயிலில் தவறவிட்டார். அதில் விலை உயர்ந்த நகைகள் இருப்பதாக புகார் அளித்தார். அதன்பேரில், அரக்கோணம் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார், தீவிரமாக செயல்பட்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். பின்னர், அரக்கோணத்திற்கு வந்த மின்சார ரயிலை சோதனை செய்து பையை கண்டு பிடித்து உரியவரிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News March 10, 2026
இராணிப்பேட்டை: மாதாந்திர குற்ற ஆய்வுக்கூட்டம்

இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் SP பே.சிபின் தலைமையில் இன்று மாதாந்திர குற்ற ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கொலை, கொள்ளை வழக்குகள், ரவுடிகள் மீதான நடவடிக்கை, நிலுவையில் உள்ள பிடிகட்டளைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் உரிய தண்டனை பெற்றுத்தரவும், கஞ்சா, குட்கா, கள்ளச்சாராயம் மற்றும் மணல் கடத்தலைத் தடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
News March 10, 2026
ராணிப்பேட்டை: வங்கியில் வரிசையில் நிற்க வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.
News March 10, 2026
ராணிப்பேட்டை: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு!

ராணிப்பேட்டை மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதற்கு நீங்க எந்த காசும் கட்ட வேண்டாம். உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினாப் போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <


