News March 31, 2024
சென்னையை சேர்ந்தவர் மலையேறும் போது உயிர் இழப்பு

கோவை வெள்ளியங்கிரிமலைக்கு சென்னையை சேர்ந்த ரகுராமன் 5ஆவது மலையில் உள்ள சீதை வனம் பகுதியில் நேற்று உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் 3 பேர் உட்பட ஒன்றரை மாதத்தில் மட்டும் மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் 6 பேர் மரணமடைந்துள்ளனர். வெள்ளியங்கிரி மலைக்கு செல்வோர் உடல் முறையாகபரிசோதனை செய்யவும். உடலில் சிறு பிரச்னைகள் இருந்தாலும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News August 15, 2025
பிராட்வே கல்லூரியில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

நாளை 79-வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் இச்சுகந்திர தினத்தை முன்னிட்டு சென்னை பிராட்வே கன்னிகாபரமேஸ்வரி கல்லூரி மாணவிகள் முகத்தில் இந்திய மூவர்ணக் கொடி வடிவங்களும், தேசியச் சின்னங்களும் தீட்டிக் கொண்டு உற்சாகமாக கொண்டாடினர்.
News August 15, 2025
சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்

சென்னையில் வசிக்கும் மக்கள் விடுமுறை தினத்தன்று தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 3 நாள்கள் தொடர் விடுறை வருவதால் சென்னையில் வசிக்கும் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். மக்கள் ஒரே நேரத்தில் சென்றதால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரில் ஏற்பட்டது.
News August 14, 2025
நாளை விருது வழங்கும் முதல்வர் ஸ்டாலின்

சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழாவின்போது விருதுகள், காசோலைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்குவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டில், சிறந்த மாநகராட்சிகளாக ஆவடி, நாமக்கல் மாநகராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. சிறந்த நகராட்சிகளுக்கான விருதுகளுக்கு ராஜபாளையம், ராமேசுவரம், பெரம்பலூா் நகராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இம்மாநகராட்சி, நகராட்சிகளுக்கு நாளை விருதுகளை வழங்குகிறார்.