News March 13, 2025
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மந்தம்

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கிய 12 நாள்களில் 42 ஆயிரம் மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு சேர்க்கை தொடங்கிய 10 நாள்களில் 80,000 மாணவர்கள் வரை சேர்க்கப்பட்ட நிலையில், இந்தாண்டு மாணவர்கள் சேர்க்கை சற்று மந்தமாகவே நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 37,553 பள்ளிகளில் 2025 – 26 கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை கடந்த 1ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
Similar News
News March 14, 2025
மின்சாரம் தாக்கி கோவில் பூசாரி பலி

தர்மபுரி, மாரண்டஹள்ளியை சேர்ந்தவர் மாதையன் (45). இவர், பாரூர் அருகே உள்ள மொழிவயனுார் முனியப்பன் கோவில் பூசாரியாக உள்ளார். இந்நிலையில் கடந்த 12 தேதி காலை கோவிலில் பூஜை செய்ய சென்றுள்ளார். அப்போது கோவிலின் பின்புறமாக இருந்த, இரும்பு ஷீட்டை அவர் தொட்டபோது அதில் கசிந்த மின்சாரம் தாக்கியதில், மாதையன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை செய்து வருகின்றது.
News March 14, 2025
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.. ₹3 லட்சம் நிவாரணம்

சேலத்தில் பணியின்போது தண்ணீர் தொட்டியின் மீதிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சுப்ரமணி (55) என்பவரது குடும்பத்திற்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து சுப்ரமணியின் குடும்பத்திற்கு ₹3 லட்சம் நிதியுதவி வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார்.
News March 14, 2025
200% வரி விதிப்பு: டிரம்ப் அதிரடி

அமெரிக்க விஸ்கி மீது ஐரோப்பிய யூனியன் கூடுதல் வரி விதித்துள்ளதால், ஐரோப்பிய நாடுகளில் தயார் செய்யப்படும் ஒயின், ஷாம்பெயின் மற்றும் மதுபானங்களுக்கு 200% வரியை டிரம்ப் அறிவித்து அதிரடி காட்டியுள்ளார். அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் நாடுகள், அதிக வரி விதிக்கக் கூடாது என டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்த புதிய வரி விதிப்பு ஏப்.1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.