News March 13, 2025

சிறுமிக்கு பாலியல் தொல்லை: சகோதரி கணவருக்கு ஆயுள்

image

ஒடிசாவை சேர்ந்த ராஜ்குமார்(35). கடந்த 2018-ம் ஆண்டில் ராஜ்குமார் தனது மனைவியின் சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் இதில் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில், எண்ணூர் மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின் வழக்கு பதிந்தனர்.இந்நிலையில் கடந்த 8 வருடங்களுக்கு பிறகு திருவள்ளூர் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் ராஜ்குமார்க்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

Similar News

News August 28, 2025

திருவள்ளூர்: ஆரம்பாக்கம் சிறுமி வழக்கில் குண்டாஸ்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் கடத்த சில நாட்களுக்கு முன்பு ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 14 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பின்னர் ராஜு பிஸ்வ கர்மா என்பவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் நேற்று இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

News August 28, 2025

எண்டோஸ்கோப்பிக் அறுவை சிகிச்சையில் சாதனை

image

சில நாட்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் மூக்கின் வழியாக மூளை நீர் வடிதலிற்கான சிகிச்சை மேற்கொள்ள திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு வந்தார்.முதியவருக்கு எண்டோஸ்கோப்பிக் என்னும் அரிதான அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். சிகிச்சைக்கு பின் முதியவர் நலமுடன் வீடு திரும்பினார். இது மாதிரியான அறுவை சிகிச்சை முதன்முறையாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் நடந்துள்ளது.

News August 28, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் நேற்று இரவு 11 மணி முதல், இன்று காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!