News March 13, 2025
ஃபேன் பாயாக வரேன்..! குட் பேட் அக்லி படத்தில் சிம்பு?

‘குட் பேட் அக்லி’ படத்தில் நிறைய சர்ப்ரைஸை அடுக்கி வைத்திருக்கிறாராம் ஆதிக். அதில் ஒரு தகவல் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக். படத்தில் அஜித்துடன் சிம்பு ஒரு சின்ன கேமியோ ரோலில் நடித்துள்ளார் எனக் கூறப்படுகிறது. ஃபேன் பாய் சம்பவமாக ஆதிக் எடுத்து வரும் படத்தில், அடுத்தடுத்த ஆனந்த வெள்ளத்தில் ரசிகர்களை மொத்தமாக ஆதிக் மூழ்கடித்துவிடுவார் போலயே!
Similar News
News March 24, 2026
புதன்கிழமை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, தென்காசி, நெல்லை மாவட்டங்களில் ஏப்.1(புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏப்.1-ம் தேதி முழு ஆண்டுத் தேர்வும் தொடங்கவிருப்பதால் விடுமுறை கிடைக்குமா என்று பள்ளி மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. ஆனால், உள்ளூர் விடுமுறை அறிவிப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது என மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. SHARE IT
News March 24, 2026
13 ஆண்டுகளாக கோமாவில் இருந்தவர் மரணம்

‘எங்களை மன்னித்துவிடு’ என பெற்றோர் உருக, என்ன நடக்கிறது என தெரியாமலே சுயநினைவற்று இருந்தான் மகன். இந்த மனதை உருக்கிய காட்சிகள் இணையவாசிகளை சமீபத்தில் ஆக்கிரமித்தது. இந்நிலையில், 13 ஆண்டுகளாக கோமாவில் இருந்த ஹரிஷ் ராணா (32) உயிரிழந்துவிட்டதாக டெல்லி AIIMS கூறியுள்ளது. 2013-ல் கல்லூரி மாடியிலிருந்து தவறி விழுந்த ஹரிஷை <<19390375>>கருணைக் கொலை<<>> செய்ய SC அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
News March 24, 2026
தமிழக தேர்தலில் எல்.முருகன் போட்டியா?

மத்திய இணையமைச்சர் எல்,முருகன், 2026 தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை அவிநாசி, மேட்டுப்பாளையம் ஆகிய தொகுதிகளை பாஜக தலைமையிடம் விருப்பமாக கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார். மத்திய அரசியலில் இருந்து மாநில அரசியலுக்கு அவர் திரும்புவதாக வெளியான தகவல் கவனம் பெற்றுள்ளது.


